தாண்டவம் படத்தின் கதை குறித்த பிரச்னையில் இயக்குனர்கள் சங்கம் விசாரணையை தொடங்கியுள்ளது. விக்ரம், அனுஷ்கா நடித்த தாண்டவம் படம் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்ககிறது.
செப்டம்பர் வெளியீடு என்று தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாண்டவம் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் பொன்னுசாமி உரிமை கொண்டாடுகிறார்.
இயக்குனர் சங்கத்திலும் புகார் செய்துள்ளார். இவர் ராதாமோகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
இயக்குனர் சங்கத்தில் பொன்னுசாமி அளித்த புகாரில் கடந்த 2011ல் படத்தின் தயாரிப்பாளரை அணுகி தாண்டவம் படத்தின் கதையை சொன்னேன். அதை படமாக்கலாம் என்றனர்.
பிறகு என்னுடன் ஆலோசிக்காமல் இயக்குனர் விஜய்யை வைத்து படத்தை எடுத்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.
இந்த பிரச்னை குறித்து இயக்குனர் சங்கம் விசாரணை நடத்தி வருகிறது. இன்னும் தீர்வு ஏற்படவில்லை.
தயாரிப்பு தரப்பில் கேட்டபோது பொன்னுசாமி கடந்த வருடம் கதை சொன்னார். நாங்கள் பார்வையற்றவர் கதையொன்றை படமாக்குவதாக சொல்லி அதை திருப்பி கொடுத்துவிட்டோம் என்றார்.
இயக்குனர் விஜய் கூறும்போது தாண்டவம் படம் உதவி இயக்குனர் பொன்னுசாமிக்கும் இயக்குனர் சங்கத்துக்கும் திரையிட்டு காட்டப்பட்டது.
பட வேலைகளை தொடர்ந்து செய்யும்படி இயக்குனர் சங்கம் என்னிடம் கூறி உள்ளது என்றார்.
0 comments:
Post a Comment