அடுத்த ஆண்டு சித்தார்த்-சமந்தா திருமணம்


தெலுங்கு சினிமாவில் சித்தார்த்-சமந்தா ஜோடியைப்பற்றி காதல் செய்தி வெளிவராத நாளே இல்லை என்கிற அளவுக்கு அவர்களின் காதல் செய்தி காட்டுத்தீயாய் பரவிக்கிடக்கிறது. 

ஆரம்பத்தில் காதலை மூடி மறைத்து வந்த அவர்கள், சமீபகாலமாக வெளியிடங்களுக்கு ஜோடியாக வரத் தொடங்கியுள்ளனர். 

சமீபத்தில்கூட காளஹஸ்தி கோயிலில் ராகு கேது பரிகார பூஜை செய்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் வெளியானபிறகு அவர்களின் காதல் செய்தி இன்னும் உறுதியானது.

இதையடுத்து அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்களால் மறுப்பு சொல்ல முடியவில்லை. 

ஆனால், சமந்தா அளித்த பதிலில், சித்தார்த்தான் அவரது வருங்கால கணவர் என்பது தெரியவந்திருக்கிறது. 

ஆனால், எங்கள் திருமணம் இப்போதைக்கு இல்லை என்று கூறிய சமந்தா, தற்போது என் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. 

அதனால் இந்த படங்களை முடித்தபிறகுதான் திருமணம் பற்றி முடிவு செய்வேன் என்றும் கூறியிருக்கிறார். 

ஆக, அடுத்த ஆண்டில் சித்தார்த்-சமந்தா திருமணம் நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

எனக்கு திருமணமா? செம காமெடி - கலாய்க்கிறார் நயன்தாரா


பொதுவாக, நடிகைகளுக்கு இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமாக அமைவது இல்லை. அப்படியே அமைந்தாலும், அம்மா, அக்கா, அண்ணி வேடங்கள் தான், கிடைக்கும்.  

இந்த விஷயத்தில், நயன்தாரா விதிவிலக்கு. இரண்டாவது இன்னிங்சில், தமிழ், தெலுங்கில், ரவுண்டு கட்டி அடிக்கிறார். இவர் நடிக்கும் அனைத்து படங்களுமே, முன்னணி ஹீரோக்கள் படங்கள் தான். 

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், திருமணம் குறித்து கூறுகையில்,"என் திருமணத்தை பற்றி, இப்போது யோசிக்கவே இல்லை. 

அதற்கு நேரமும் இல்லை. என் வாழ்க்கையில், எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்தன. எனவே, என் எதிர்காலத்தை கடவுள் கையில் கொடுத்து விட்டேன். 

கடவுள் விருப்பத்தின்படி தான், எல்லாம் நடக்கும். எதுவுமே, நம் கையில் இல்லை என்றார்.  

மேலும், அவர் கூறுகையில்,"ராம ராஜ்யம் படத்தில் சீதையாக நடித்த பின், கிளாமராக நடிக்க மறுப்பதாக என்னைப் பற்றி செய்திகள் வருகின்றன. 

படங்களில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை, நான் முடிவு செய்ய முடியாது. படத்தின் கதை தான், முடிவு செய்கிறது என்கிறார், நயன்தாரா.

கண்பேசும் வார்த்தைகள் - விமர்சனம்


விஜய் டி.வியின், "மதுரை, "சரவணன் மீனாட்சி மெகா தொடர்களின் நாயகர் மிர்ச்சி செந்தில் கதாநாயகராக அதுவும், வாகைசூட வா இனியா ஜோடியாக தமிழ் சினிமா நாயகராக அடியெடுத்து வைத்திருக்கும் படம் தான் "கண்பேசும் வார்த்தைகள்".

திருவாரூரில் இருந்து சொந்த ஊர் வெறுத்துபோய் சிங்கப்பூர் சிட்டிசன் ஆகும் முடிவில், சிங்கப்பூரில் வேலை பார்க்கும் நண்பனைத் தேடி, நாடி போகிறார். 

அங்கு நண்பர் முருகதாஸின் உதவியால் தன் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடிக் கொள்ளும் செந்தில், சிங்கப்பூர் சிட்டிசன்னாகும் முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார். வெளிநாட்டினர் சிங்கப்பூர் குடியுரிமை பெறுவது அவ்வளவு எளிதல்ல... 

அதற்கு ஈஸியான ஒரே வழி சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற பெண்ணை காதலித்து கரம்பிடிப்பது தான் என்பதை ஆரம்பத்திலேயே உணரவும் செய்கிறார். அதன் விளைவு சிங்கப்பூரில் ஒரு ஆடை அலங்கார கடையில் வாழ்க்கை வாழும் இனியாவை, சிங்கப்பூர் சிட்டிசன் என கருதி காதலிக்க தொடங்குகிறார். 

கிட்டத்தட்ட ஹீரோ செந்திலின் எண்ணத்திலேயே தன் முரட்டு அக்கா புருஷனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கை படாமல் தப்பிக்க, சிங்கப்பூரில் வேலை பார்க்கும் இனியாவும் ஒன்றிரண்டு சந்திப்புகளில் செந்திலுடன் காதல் வயப்படுகிறார். 

இவர்களது காதலுக்கு ஆடுகளம் காமெடியன் முருகதாஸும், ஒரு கல் ஒரு கண்ணாடி ஜாங்கிரி மதுமிதாவும் உதவுகின்றனர். செந்திலுக்கு சிங்கப்பூர் சிட்டிசன் கிடைத்ததா.? இனியா முரட்டு மாமனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கை படாமல் தப்பித்தாரா...?! என்பது "கண்பேசும் வார்த்தைகள்" படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

திருவாரூரில் இருந்து சிங்கப்பூர் செல்லும் இளைஞனாகவே யதார்த்தமாக பாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார் மிர்ச்சி செந்தில்! இவரும், முருகதாஸும் சிங்கப்பூர் எம்பஸியில், சிங்கப்பூர் சிட்டிசனாக வாழ விரும்புவதற்காக... "எங்க ஊரில் கோயிலுக்கு போனா செருப்பு கா‌ணோம், ஹாஸ்பிட்டலுக்கு போனா உறுப்பு காணோம், ஆசிரமத்திற்கு போனா கற்பு காணோம்..." என்று பேசும் காமெடி பன்ச்சுகள் கலக்கல்!

மார்டன் கெட்டப்பில் வாகைசூட வா இனியா கொஞ்சம் செயற்கையாக தெரிகிறார். ஒரு பாடல் காட்சியில் கிளாமர் தூக்கலாக மிர்ச்சி செந்திலுடன் ஒட்டி உரசுவது கவர்ச்சி பிரியர்களுக்கு செம விருந்து. இனியா - செந்தில் காதலும், இனியாவின் மார்டன் கெட்-அப் மாதிரியே செயற்கையாக தெரிவது "கண்பேசும் வார்த்தைகள்" படத்தின் பலவீனங்களில் ஒன்று!

ஜாங்கிரி மதுமிதா, முருகதாஸ், லிவிங்ஸ்டன், நான் கடவுள் ராஜேந்திரன், கதிரவன், கந்தவேலு உள்ளிட்டவர்கள் படத்திற்கும் தங்கள் பாத்திரத்திற்கும் பலம் சேர்த்திருக்கின்றனர்.

புதியவர் ஷாமன்த்தின் இசை, நாககிருஷ்ணனின் ஒளிப்பதிவு, ஆர்.சரவணக்குமாரின் கதை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும், ஆர்.பாலாஜியின் எழுத்து - இயக்கத்தில் ஏதோ ஒன்று இல்லாத குறை!

ஆக மொத்தத்தில், "கண்பேசும் வார்த்தைகள்" - "பேசுவதும், பேசாததும்" ரசிகர்களின் கையில் இருக்கிறது!

பாடகர் ஆனார் பவர் ஸ்டார்


குறுகிய காலத்தில் சினிமாவின் அத்தனை ஏரியாக்குள்ளும் பவர் ஸ்டார் சீனிவாசனை அழைத்துச் சென்று விட்டார்கள். கடைசியாக அவரை பாடகராகவும் ஆக்கி விட்டார்கள். 

ஆர்.ஆர்.சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் "சுட்ட பழமும் சுடாத பழமும்" என்ற படத்தில் பவர் ஸ்டார் ஒரு பாடல் பாடிவிட்டார். 

சமர்த், லதாராவ், என்ற புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை சிவாஜி என்ற புதுமுகம் இயக்குகிறார். கார்த்திக் என்பவர் இசை அமைத்துள்ளார். இதில் முத்து விஜயன் எழுதிய...

துட்டுன்னா துட்டு மழை கொட்டுது மாமு...
அண்டாவ கொண்டு வந்து அள்ளிக்க மாமு... 

என்ற பாடலை பவர் ஸ்டார் பாடியுள்ளார். ரீ டேக்கே இல்லாமல் ஒரு மணி நேரத்தில் பாடலை பாடிவிட்டு கிளம்பி விட்டாராம். பாட்டு பாட அருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சம்பளம் 2 லட்சம் ரூபாய். 

இந்த பாடலுக்கான காட்சியில் அவரே ஆடவும் உள்ளார். பப்லி என்ற மும்பை மாடல் அழகி உடன் ஆடப்போகிறார்.

பிரபுதேவாவின் அடுத்த காதலி ஜாக்குலைன்


தமிழ் சினிமாவில் ஒரு நடன மாஸ்டராக அறிமுகமானவர் பிரபுதேவா. நடன மாஸ்டர் சுந்தரத்தின் மகன் என்கிற அடையாளத்தை வைத்துக்கொண்டு, சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே, ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது உள்பட சில பாடல்களுக்கு நடனமாடி குறுகிய காலத்தில் பரபரப்பானார் பிரபுதேவா. 

அதன்பிறகு ஹீரோவாகி பல வருடங்களாக நடித்து வந்தவர், போக்கிரி படத்துக்குப்பிறகு இயக்குனராகி, இப்போது பாலிவுட்டில் பெரிய இயக்குனராக கொடிநாட்டி வருகிறார். 

இந்த நிலையில், வில்லுவில் தனது இயக்கத்தில் நடித்த நயன்தாராவை காதலித்தார் பிரபுதேவா. 

அதன்காரணமாக, அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொந்த மனைவியையே விவாகரத்து செய்தார். 

ஆனால் பின்னர் நயன்தாராவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட, கடைசி நேரத்தில் அவரை கழட்டி விட்டார். 

அதன்பிறகு மீண்டும் மனைவியுடன் சேர்ந்தார். இப்படியாக, சினிமாவில் சாதித்து வரும் பிரபுதேவாவுக்கு குடும்ப வாழ்க்கையில் ஏகப்பட்ட சோதனைகள்.

ஆனால் தற்போது மீண்டும் அவருக்கு ஜாக்குலைன் என்ற பாலிவுட் நடிகையுடன் நெருக்கம் ஏற்பட்டிருப்பதாக பாலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறது. 

இந்த ஜாக்குலைன், தற்போது பிரபுதேவா இயக்கி வரும் ராமைய்யா வாஸ்தவாய்யா என்ற இந்தி படத்தில் இரண்டு ஹீரோயினிகளில் ஒருவராக நடிக்கிறாராம். 

இருவருக்குமிடையே நெருக்கம் அதிகமாகியிருப்பதால், அடிக்கடி பார்ட்டிகளிலும் தலைகாட்டுகிறார்களாம். 

அதோடு, தான் அடுத்து இந்தியில் இயக்கும் படத்தின் ஹீரோயினும் ஜாக்குலைன் தான் என்று இப்போதே அறிவித்து விட்டாராம் பிரபுதேவா.

எமிஜாக்சனுக்கு மீண்டும் தடைபோட்ட டைரக்டர் ஷங்கர்




மதராசப்பட்டினம், தாண்டவம் படங்களில் நடித்தவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். இவர் விக்ரம் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் ஐ படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

முந்தைய படங்களை விட மெகா படம் என்பதோடு, இந்த படத்தில் நடிப்பதற்கு எமிக்கான சம்பளமும் பல கோடிகளாக உயர்த்தப்பட்டுள்ளதாம். 

அதனால் கோலிவுட்டிலேயே ஹாலிவுட் ரேஞ்சுக்கு சம்பளம் வாங்கும் நடிகையாகியிருக்கிறார் எமி. இதையடுத்து அவரது நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறதாம்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நேரத்தில் அடிக்கடி மிட்நைட் பார்ட்டிகளில் கலந்து கொண்ட எமி, நள்ளிரவு வரை குடியும் குடித்தனமுமாக இருந்து விட்டு காலை படப்பிடிப்பு என்றால் மதியம்தான் ஸ்பாட்டில் தலைகாட்டினார். 

இதனால் படப்பிடிப்பு இருக்கும் நாட்களில் பார்ட்டிகளில் கலந்து கொள்வதற்கு அவருக்கு தடை போட்டார் டைரக்டர் ஷங்கர். அதையடுத்து நல்ல பிள்ளையாட்டம் அடக்கிவாசித்தார் எமி.

ஆனால் இப்போது, அவரை சந்திக்க அடிக்கடி சில ஹாலிவுட் நடிகர்கள் ஸ்பாட்டுக்கு வருகிறார்களாம். அப்படி வருபவர்கள், கேரவனுக்குள்ளேயே பாரை திறக்கிறார்களாம். 

ஏற்கனவே ஆல்ஹகாலில் முங்கு நீச்சல் நடிக்கக்கூடியவர் எமி எனபதால், தனது சுயகட்டுப்பாட்டையும் மீறி சரக்கு அடிக்கத் தொடங்கி விடுகிறாராம். அப்படி அடித்து விட்டு, ஸ்பாட்டுக்கு வந்து நடிக்கிறாராம். 

ஆனால் இதை அவருடன் நெருக்கமாக நடிப்பவர்கள் கண்டுபிடித்து முகம் சுழிக்கிறார்களாம். இதையும் கண்டுபிடித்து விட்ட ஷங்கர், உடனடியாக எமிஜாக்சனின் ஹாலிவுட் நண்பர்களை அங்கிருந்து விரட்டியடித்து விட்டாராம். 

அதோடு, படப்பிடிப்பு இல்லாத நாட்களில் யூனிட் சார்பில் பார்ட்டி வைக்கிறோம். அதனால் படப்பிடிப்பு நாட்களில் மட்டுமே ஆல்ஹகால் எடுத்துக்கெர்ளள வேண்டாம் என்று எமிக்கு மீண்டும் தடை போடப்பட்டுள்ளதாம்.

இயக்குனர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் இசையமைப்பாளர்கள்


சமீபகாலமாக சினிமாத்துறையில் இசையமைப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிதது வருகிறது. 

இதனால் முன்னணியில் இருக்கும இசையமைப்பாளர்களே தங்களை தக்க வைத்துக்கொள்ள கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். 

இந்த நிலையில், இயக்குனர்கள் தங்கள் பக்கம் இருந்தால்தான் அவர்கள் இயக்கும் படங்களுக்கு தங்களின் பெயரை பரிந்துரைப்பார்கள் என்று சில இசையமைப்பாளர்கள் இயக்குனர்களுக்கு தாங்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து சில லட்சங்களை லஞ்சமாக வெட்டி வருகின்றன.

அந்த பட்டியலில் வாரிசு இசையமைப்பாளரும், அந்த மூன்றெழுத்து இசையமைப்பாளரும் முக்கிய இடம் பிடிக்கின்றனர். 

இதில் அந்த வாரிசு இசையமைப்பாளர் தன்னிடம் வரும் இயக்குனர்களுக்கு தனது சம்பளத்தில் இருந்து 2 லட்சம் லஞ்சமாக வெட்டினால், இன்னொரு இசையமைப்பாளரோ 5 லட்சம் வரை வெட்டுகிறாராம். 

இதன்காரணமாக, அவர்களிடம் ஒரு முறை சென்ற இயக்குனர்கள், பின்னர் தாங்கள் இயக்கும் புதிய படங்களுக்கு அதன் தயாரிப்பாளர்கள் வேறு இசையமைப்பாளர்களின் பெயரை பரிந்துரைத்தால், தங்களுக்கு இந்த இசையமைப்பாளர்களே செட்டாகும் என்ற விடாப்பிடியாக படங்களை இவர்கள் பக்கம் திருப்பி விடுகின்றனர்.

மேற்படி இசையமைப்பாளர்களின் இந்த படம் பிடிக்கும் யுக்தியை கேள்விப்பட்ட வளர்ந்து வரும் மேலும் சில இசையமைப்பாளர்களும், இப்போது இந்த பாணியில் படங்களை கைப்பற்றும் அதிரடி முயற்சியில் இறங்கியுள்ளனர். இதன்காரணமாக, டைரக்டர்களின காட்டில் காசு மழை கொட்டி வருகிறது.

சித்தார்த்-சமந்தா கல்யாண ஏற்பாடுகள் தீவிரம்



இதுவரை வதந்தியாகவே இருந்து வந்த சித்தார்த்& சமந்தா காதல் இப்போது உறுதியாகிவிட்டது. இருவரும் விரையில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். 

இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில் ஜாதகப் பொருத்தம் பார்த்ததில் அதில் ஒரு சிறிய குறை இருந்ததால் இருவரும் தங்கள் பெற்றோருடன் காளகஸ்திக்கு வந்து அந்த குறையை போக்க சிறப்பு பூஜைகளை செய்து விட்டார்கள். 

அடுத்து இருவரின் திருமண ஏற்பாடுகளை பெற்றோர் மும்முரமாக கவனித்து வருகிறார்கள். 

இருவருமே தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். மார்க்கெட்டில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இப்போது திருமணம் செய்து கொண்டால் அது பாதிக்குமே என்ற நினைக்கிறார்கள். 

ஆனால் பெற்றவர்கள் உடனடியாக திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று சொல்கிறார்கள். அதனால் கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்து விட்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்று தெரிகிறது. 

இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடந்து விடும் என்கிறார்கள். தமிழ் நாட்டில் பிரசன்னா-சினேகா திருணமத்தை ஒரு தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்ப 50 லட்சம் கொடுத்தது. 

சித்தார்த்-சமந்தா திருமணத்தை ஒளிபரப்ப 2 கோடி வரை தர சேனல்கள் முன்வந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 

விஸ்வரூபத்திற்கு 2 தேசிய விருது


2012 ம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னணி பாடகர் சங்கர்மகாதேவனுக்கும் விஸ்வரூப படத்திற்கு 2 விருதுகளும் கிடைத்துள்ளன. 

இன்று அறிவிக்கப்பட்டுள்ள விருதுகள் விவரம் வருமாறு:

தமிழ் திரைப்படமாக பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18 / 9 என்ற திரைப்படம் சிறந்த பிராந்திய படமாகவும், சிறந்தஒப்பனைக்காகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் கதாநாயகனாக ஸ்ரீயும், கதாநாயகியாக ஊர்மிளாமகந்தாவும் நடித்துள்ளனர். 

கஹானி என்ற இந்தி திரைப்படம் சிறந்த திரைக்கதைக்காக விருது பெறுகிறது. 

இந்தி திரைப்படம் பான்சிங் தோமர் என்ற படத்தில் நடித்த இர்பான் சிறந்த நடிகராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

விஸ்வரூபம் 2 விருதை தட்டி சென்றுள்ளது. சிறந்த நடனம், தயாரிப்பு வடிவமைப்பிற்கு விஸ்வரூபம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

விக்கி டோனர் என்ற இந்தி திரைப்படம் சிறந்த பொழுது போக்கு படமாகவும், தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி என்ற திரைப்படம் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதைபெற்றுள்ளது.

சிட்டாகாங் என்ற படத்தில் பாடியமைக்காக சங்கர்மகாதேவனும் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மராத்தி மொழி படத்தில் நடித்த உஷாஜாதவ் சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார்.

வத்திக்குச்சி - விமர்சனம்


பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி திலீபன், அண்ணன் முருகதாஸின் தயாரிப்பில் கதாநாயகராக களம் இறங்கி இருக்கும் படம்தான் "வத்திக்குச்சி!" முருகதாஸின் உதவியாளர் கின்ஸிலின் எழுதி-இயக்கி இருக்கும் இந்தப்படத்தில் அஞ்சலி கதாநாயகி என்பது பலம்!

சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள சமத்துவபுரம் குடியிருப்பில் வசிக்கும் ஷேர்ஆட்டோ டிரைவர் திலீபனுக்கு அதே குடியிருப்பில் வசித்தபடி ஸ்ப‌ோக்கன் இங்கிலீஷ் இன்ஸ்டியூட்டில் படிக்கும் அஞ்சலிக்கும் காதல்! 

அந்த காதலை திலீபன் தன் ஷேர் ஆட்டோவில் அடிக்கடி பயணிக்கும் அஞ்சலியிடம் சொல்லிவிட, அஞ்சலியோ மனதில் ஆசையிருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் இழுத்தடிக்கிறார். 

இந்நிலையில் ஊருக்கு உதவப்போய் உபத்திரத்தில் மாட்டிக்கொள்ளும் திலீபனை போட்டு தள்ள துடிக்கின்றனர் லோக்கல் தாதா சம்பத் தலைமையிலான கூலிப்படையும், அவர்களுக்கு பணஉதவி செய்யும் நகைக்கடை அதிபர் ஜெயபிரகாஷூம் அவரது மகனும். இவர்கள் தவிர்த்து திலீபனின் வீட்டிற்கு எதிர்வீட்டிலேயே வசிக்கும் காமெடி ஜெகனும், அவனது நண்பகளும் வேறு திலீபனை தீர்த்து கட்ட துப்பாக்கியும் கையுமாக திரிகின்றனர். அத்தனைபேரிடமிருந்தும் தப்பித்து திலீபன் அஞ்சலியை கரம் பிடிக்கிறாரா.? அல்லது அஞ்சலி, திலீபனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறாரா...? என்பது சஸ்பென்ஸ்கள் பல நிறைந்த க்ளைமாக்ஸ்!

புதுமுகம் திலீபன், இவருக்கு நடிப்பை விட ஆக்ஷ்ன் நன்கு வருகிறது. ஆக்டிங் சீன்களைக் காட்டிலும், ஆக்ஷ்ன் சீன்களில் அடித்து தூள்பரத்துகிறார் மனிதர். கலையான தமிழ்முகம், காளை போன்று ஆஜானுபாகுவான உடல்வாகு, அதற்கேற்ற உயரம் என எல்லாம் இருந்தும் திலீபனிடம் ஏதோ ஒன்று குறைகிறது. அதை அடுத்தடுத்த படங்களில் அவர் சரி செய்து கொள்வது அவருக்கும் ரசிகர்களுக்கு நலம் பயக்கும்!

நாயகி அஞ்சலி, ஏதா "எங்கேயும் எப்போதும்" வெற்றிப்படத்தில் முருகதாஸ் தன் தயாரிப்பில் நடிக்க வைத்ததற்கு நன்றி கடனாக, இந்தப்படத்தில் அவரது தம்பி திலீபன் ஜோடியாக நடிக்க சம்மதித்தது மாதிரி தெரிகிறது! வருகிறார்... போகிறார்... டயலாக் பேசுகிறார்... என்ற அளவிலேயே ஒட்டியும் ஒட்டாமலும் நடித்திருக்கும் அஞ்சலி, மற்ற படங்களைக்காட்டிலும் இந்தப்படத்தில் காஸ்டியூம் விஷயத்திலும் சரியாக கவனம் செலுத்தாமல் பட்டும்படாமல் இருந்திருப்பது ஏன் என்பது புரியாதபுதிர். பாவம் ரசிகர்கள்!

ஹீரோவின் அப்பாவாக பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவும், அம்மாவாக சரண்யாவும் வரவர போரடிக்கிறார்கள். இவர்களை இப்படி பார்த்து பார்த்து சலித்து போய்விட்டதை கோலிவுட் டைரக்டர்கள் எப்போது புரிந்து கொள்வார்களோ...?! அஞ்சலியின் அம்மாவாக ஸ்ரீரஞ்சனி, வில்லன்கள் ஜெய்பிரகாஷ், சம்பத், ஜெகன் என ஏகப்பட்ட பேர், அதில் காமெடி ஜெகன் சொபஸ்டிக் வில்லதனத்திற்கு அன்பிட்!

ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு, எம்.ஜிப்ரானின் இசை உள்ளிட்ட ப்ளஸ்பாயிண்ட்டுகள் "வத்திக்குச்சி"யை "பத்திக்கிச்சு" என பாராட்டி சொல்ல வைத்தாலும், பி.கின்ஸ்லினின் எழுத்து-இயக்கத்தில், நல்ல கதையில் கோர்வை இல்லாமல் வரும் காட்சிகள், ‌தொடர் இல்லாமல் வரும் சம்பவங்கள், தன் கையாளாக இருந்து கைமாறிப் போனவனை ரயிலில் தள்ளி தீர்த்துகட்டும் தாதா சம்பத், ஹீரோவை தீர்த்து கட்ட மட்டும் தாமதம் பண்ணும் மர்மம், காரணம் தேடும் கவனம்...உள்ளிட்ட லாஜிக் மிஸ்டேக்குகள் "வத்திக்குச்சி"யை பாதி "பத்திக்கிச்சு" என்றும் மீதி "நமத்து‌ப்போச்சு" என்றும் சொல்ல வைக்கின்றன!

மொத்தத்தில், "வத்திக்குச்சி" - ஹீரோயிஸத்துக்கு பக்க(கா) "வாத்தியக்குச்சி!" 

பரதேசி - தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுருசி - விமர்சனம்


இதற்கு முன் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு திரைப்படம் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை எனப் பாராட்டும் அளவிற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் காட்சியமைப்புகள் வாயிலாகவும், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாகவும் மிகப் பிரமாதமாக வெளிவந்திருக்கிறது பாலாவின், "பரதேசி" என்றால் மிகையல்ல!

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததற்கு முந்தைய காலகட்டத்து கதை! அதுவும், இன்று நாம் சுறுசுறுப்பாக இருக்க சுள் ளென்ற சுவையுடன் அருந்தும் தேனீர்பானமும், தேயிலை தோட்டங்களும் பிறந்‌த கதையை சொல்லும் பெருங்கதைதான் "பரதேசி படம் மொத்தமும்!

சென்னை புறநகரப் பகுதிகளில் இருந்து பஞ்சம் பிழைக்க நண்டு, சிண்டுகளோடு குடும்பம் குடும்பமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளின் தேயிலை தோட்டங்களுக்கு கூட்டி வரப்பட்ட கிராம மக்களை, கூண்டோடு கொத்தடிமைகளாக்கி ஆங்கிலேயர்களுக்கு விசுவாசம் காட்டிய கங்காணிகளின் கதை! 

ஆங்கிலே‌யர்களின் காலணி ஆதிக்கத்து கதற வைக்கும் கண்ணீர் கதைகளில் இதுவும் ஒன்று! அகப்பட்ட அடிமை இந்துக்களிடம், கிறிஸ்துவை பரப்பிய ஆங்கிலேய அடிவருடிகளின் கதை..., இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் பரதேசியின் கதையையும், களத்தையும். 

ஆனால் இதுமாதிரியானதொரு அடிமைகளின் கதையில் ஓர் அழகிய காதலையும், அவர்களின் பிரிவையும் கலந்து கட்டி பரதேசியை கலர்புல்லாகவும், காண்போர் மனதை கரைக்கும் படியாகவும் செய்திருக்கும் பாலாவின் சாமர்த்தியத்திற்கு அவரே நிகர்.

ஒட்டுப்பொறுக்கி, குசுப்பொறுக்கி என ஏகப்பட்ட பட்டப்பெயர்களுடன் வெள்ளந்தி கிராமத்து இளைஞன் ராசாவாக அதர்வா முரளி. சட்டி கிராப்பும், சாக்கு துணி சட்டையும், அழுக்கு பஞ்சகட்ச வேஷ்டியும் சகிதமாக ஊரில் நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் தண்டோரா போட்டு வயிற்றை கழுவும் அந்தக்கால இளைஞனாக அறிமுகமாகும் அதர்வா, நாலுகாசு சம்பாதித்து, நல்ல பெயர் எடுக்க, ஆதரித்த அம்மா வழி பாட்டியையும், காதலித்த அங்கம்மா வேதிகாவையும் அம்போ என விட்டுவிட்டு, கங்காணியின் பேச்சை நம்பி ஊர் மொத்தத்தையும் கூட்டிக்கொண்டு வேலை தேடி போகும் காட்சிகளில் நம் கண்களில் நீரை வரவழைத்து விடுகிறார் என்றால், அதன்பின் வரும் அடிமைத்தன காட்சிகளில் அனைவரது கண்களிலுமே நீரை வரவழைத்து விடுகிறார். 

நடிப்பில் அவரது அப்பா முரளியை மிஞ்சியிருக்கிறார் மனிதர். இதையெல்லாம் பார்க்க இன்று நடிகர் முரளி இல்லையே என்ற ஆதங்கம் நம்முள்ளும் எழுகிறது. "ஹேட்ஸ் ஆப் அதர்வா. அதர்வாவுக்கு பல விருது நிச்சயம்! அதர்வாவுக்கு மட்டுமல்ல, இப்படத்தின் லைட்பாய்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளில் தொடங்கி இயக்குனர் பாலா வரை அனைவருக்கும் தேசிய விருது உள்ளிட்ட ‌அனைத்து விருதுகளையும் தரலாம்!

கிராமத்து அங்கம்மாவாக வேதிகா, அதர்வாவை ஆரம்பம் முதலே வம்புக்கு இழுப்பதும், ஒருகட்டத்தில் அன்பால் அடிப்பதும், இரண்டுங்கெட்டானான அதர்வாவின் கருவை தன் வயிற்றில் சுமந்து, தனது வீட்டாரால் ஒதுக்கிவைக்கப்படுவதும், பின் க்ளைமாக்ஸில் அதர்வாவுக்கு பிறந்த பிள்ளையுடன் அவர் வாழும் அடிமை வாழ்க்கைக்கே வந்து சேர்வதுமாக நம் கண்களை ஈரப்படுத்திவிடுகிறார்.

வேதிகா இப்படி என்றால் இன்னொரு நாயகி தன்ஷிகாவோ மரகதம் கேரக்டரில் அதர்வாவிற்கு முந்தைய செட் அடிமையாக ஒரு ‌பெண் குழந்தையுடன், புரு‌ஷனை தொலைத்துவிட்டு படும்பாடு சொல்லிமாளாது. 

மற்ற இயக்குனர்களிடமிருந்து வேறுபட்டு பாலா, அதர்வாவிற்கும், தன்ஷிகாவிற்கும் காதலை கண்சிமிட்ட விடாமல் நல்ல நட்புடன் விட்டிருப்பது பலே சொல்ல வைக்கிறது. இதுநாள்வரை பாலா பட நாயகர்கள் அளவு, பாலா பட நாயகிகள் பேர் வாங்கியதில்லை எனும் குறையை போட்டி போட்டுக்கொண்டு போக்குவார்கள் தன்ஷிகாவும், வேதிகாவும் ‌என நம்பலாம்.

கங்காணி - ஜெர்ரி, அவரது மனைவியாக வரும் "அங்காடித்தெரு சிந்து, தங்கராசு, உதய் கார்த்திக், கருத்தக்கன்னி - ரித்விகா, டாக்டர் வேஷம் போடும் குரூஸ்-மோகன், பாட்டி-கச்சம்மாள், டாக்டர் பரிசுத்தம்-சிவசங்கர், ஆங்கிலேய துரை - டிம் உள்ளிட்டவர்களும் பரதேசியில் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

பரதேசி பின்னால் நடக்க இருக்கும் கதையை முன்கூட்டியே சொல்லும் வைரமுத்துவின் வைர வரிகளும், அதற்கு ஜி.வி.பிரகாஷ்குமாரின் இனிய இசையும், பாடல்கள் இசை போன்றே பின்னணி இசையும், இது பாலாவின் பரதேசியா, ஜி.வி.பிரகாஷ்குமாரின் பரதேசியா என கேட்க தூண்டுகின்றன. அதேமாதிரி செழியனின் செழுமையான ஒளிப்பதிவும், நாஞ்சில் நாடனின் வசனமும், கிஷோரின் "நச் என்ற படத்தொகுப்பும் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன.

ஆக மொத்தத்தில், பாலாவின் எழுத்து-இயக்கத்தில் "பரதேசி" - தமிழ்சினிமா ரசிகர்களுக்கு - "புதுருசி!"

விஜய்யின் தலைவா படத்தில் பாலிவுட் அயிட்டம் நடிகை இறக்குமதி




விஜய் நடித்து வரும் தலைவா படத்தில் அமலாபால் நாயகியாக நடித்து வந்தார். அவரையடுத்து இப்போது விஜய்யின் மும்பை காதலியாக ராகினி என்ற பாலிவுட் நடிகை இணைக்கப்பட்டு அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் மும்பையிலேயே படமாக்கிவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார் இயக்குனர் விஜய். 

வந்த வேகத்தில் சென்னையிலுள்ள பின்னி மில்லில் ஒரு அயிட்டம் பாடலை படமாக்கியிருக்கிறார். 

அந்த பாடலில் ஆடுவதற்கும் பாலிவுட் கவர்ச்சிப்புயல் கிரண் என்றொரு நடிகையை கொண்டு வந்திருக்கிறார்.

இந்தி சினிமாவில் தனது அதிரடி ஆட்டத்தால் இளவட்ட ரசிகர்களின் நாடி நரம்புகளில துடித்துக்கொண்டிருக்கும் இந்த கிரண், தலைவா பட பாடலுக்கு இன்னும் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளாராம். 

தமிழில் ஏற்கனவே மல்லிகா ஷெராவத் போன்ற பாலிவுட் நடிகைகள் ஆடியிருக்கும் நிலையில், அவரைப்போன்றோர்களை மிஞ்சும் வகையில் தனது ஆட்டம் இருக்க வேண்டுமென்று செமத்தியாக ஆடியுள்ளாராம் கிரண். 

அவருடன் மேலும் ஐந்து மும்பை அழகிகளும் இணைந்து ஆடியிருக்கிறார்களாம்.

அமலாபால், ராகினி என்று இரண்டு நடிகைகள்இருக்குமபோது இன்னொரு கவர்ச்சி நடிகையை இறக்கி விட்டது ஏன்? என்று இயக்குனரைக்கேட்டால், அயிட்டம் பாடல்களில் அற்புதமாக ஆட வேண்டும். 

அதோடு, தேவையான கிளாமரையும் தயக்கமின்றி காண்பித்து நடிக்க வேண்டும். ஆனால் கதாநாயகிகள் ஒரு லிமிட் வைத்திருப்பார்கள். 

அதை விட்டு இறங்கி வர தயங்குவார்கள். அதனால்தான் போதும் போதும் என்கிற அளவுக்கு கிளாமர் காட்டி நடிக்கும் கிரணை கூட்டி வந்து விட்டேன் என்கிறார்.

ஒன்பதுல குரு - விமர்சனம்


இளைய தளபதி விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார், இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் "ஒன்பதுல குரு".

வினய், சத்யன், அரவிந்த் ஆகாஷ், சாம்ஸ், பிரேம்ஜி ஐவரும் கல்லூரி நண்பர்கள். கல்லூரி காலம் முடிந்து இந்த ஐவரில் வினயக்கு ஒரு குண்டு பெண்ணுடன் கட்டாய திருமணமும், சத்யனுக்கு வசதியான வீட்டோடு மருமகன் எனும் அடிமை வாழ்க்கையும், அரவிந்த் ஆகாஷ்க்கு காதல் திருமணம் என்றாலும் கசக்கும் திருமணவாழ்க்கையாகவும் அமைந்து விட, மூவரும் இல்லற வாழ்க்கையை வெறுத்து மீண்டும் பேச்சுலர் ஆகும் முடிவோடு வீட்டை விட்டு பெங்களூர் ஓடுகின்றனர். 

போகும்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும் தங்கள் நண்பன் சாம்ஸையும் கூட்டிக் கொண்டு, பெங்களூருவில் காஸ்ட்லியான கள்ளக்காதல் வாழ்க்கை நடத்தும் பிரேம்ஜியின் தயவில் ஜாகையும், வேலையும் தேடிக்கொண்டு ஜாலி வாழ்க்கை வாழ்கின்றனர். 

இவர்களின் ஜாலி புத்தியை தெரிந்து கொண்டு அழகி லட்சுமிராய், நால்வரையும் மிரட்டி கடத்தி கோடிக்கணக்கில் பணம் பறிக்கிறார். 

அவரிடமிருந்து தப்பித்தால் போதுமென்று எஸ்கேப் ஆகும் நால்வரும், இல்லறமே இனிய அறம் என்று மீண்டும் தங்களது மனைவிமார்களைத் தேடி வருவதே "ஒன்பதுல குரு படத்தின் ஒட்டுமொத்த கதை! 

இந்த ஐந்தாறு வரிக் கதையை காமெடியாக எடுக்கிறேன் பேர்வழி... என ஆங்காங்கே கடித்தாலும், பெருவாரியாக சிரிக்கும் படியும், ரசிக்கும்படியும் எடுத்து ஜெயித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பி.டி.செல்வகுமார் என்பது ஆறுதல்!

வினய், சத்யன், அரவிந்த், சாம்ஸ், பி‌ரேம்ஜி ஐவருக்குமே சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மெய்யாலுமே ஹீரோ வினய்க்கு ‌பெரிய மனசுதாங்க... அந்த குண்டுப்பெண் கீதாசிங் ஜோடியாக நடிக்க சம்மதித்தற்காகவும், மேற்படி ஐவரில் ஒருவராக நடித்ததற்காகவும் வினய்யை பாராட்டலாம்!

பெங்களூர் அழகி சஞ்ஜனவாக வரும் லட்சுமிராய்யும், குமுது டீச்சராக வரும் சோனாவும், கவர்ச்சி ப்ளஸ். ஆனால் லட்சுமிராய் திடீரென்று நால்வரிடமும் துப்பாக்கியை காட்டி மிரட்டுவது நம்பமுடியாத ஹம்பக்! கீதாசிங், கார்த்திகாஷெட்டி, ரூபாஸ்ரீ மூவரும் ஓ.கே. சத்யனின் மாமியாராக மாஜி நாயகி மந்த்ராவா ஓவரப்பா!

"கேவின் இசையில் எக்கச்சக்க பழைய பாடல்கள் இப்படத்தின் கதையில் சிட்சுவேஷனுக்காக என்றாலும் டூ-மச்! சாரி, பெட்டர்லக் நெக்ஸ்ட்டைம்! செல்லதுரையின் ஒளிப்பதிவும், கே.எஸ்.ரவிக்குமார், டி.பி.கஜேந்திரன் உள்ளிட்ட இயக்குநர்களின் பங்களிப்பும் படத்தின் பெரும்பலம்!

பி.டி.செல்வகுமாரின் எழுத்து, இயக்கத்தில் கோர்வையாக கதை சொல்லப்படாவிட்டாலும், "ஒன்பதுல குரு", ஒன்பதுல குருவாக இல்லாவிட்டாலும் ஏழ‌ரைச்சனியாக இல்லாதது ஆறுதல்!

கமலுக்கு அட்வைஸ் செய்த ரஜினிகாந்த்


ரஜினி, கமல் இருவரும் ஆரம்ப காலத்தில் இருந்தே சினிமாவில் ஒன்றாக நடித்தவர்கள். அதையடுத்து அவர்கள் வெவ்வேறு பாதைகளில் பயணித்தாலும், அவர்களுக்கிடையிலான நட்பு என்பது மாறாமலேயே இருந்து வருகிறது. 

அதை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் விஸ்வரூபம் படத்துக்கு அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டபோது, முதல் ஆளாக அதற்கு குரல் கொடுத்தவர் ரஜினிதான். 

அதன்பிறகுதான் மற்ற திரையுலகினர் ஆதரவு கொடுத்தனர். அதையடுத்து, படம் வெளியாகி 200 கோடி வரை வசூலை ஈட்டியிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் இந்த சூழ்நிலையிலும், தான் குடியிருக்கும் வீட்டை தனியாரிடம் அடகு வைத்திருந்த கமல், அதை மீண்டு மீண்டும் வங்கியில் அடமானம் வைத்தார். 

இதனால் விஸ்வரூபம்தான் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறதே. இந்த நேரத்தில் அதற்காக மீண்டும் வீட்டை அடகு வைக்க வேண்டும் என்று கமலின் அபிமானிகள் பலருக்கு கேள்வி எழுந்தது. 

அதேகேள்வி ரஜினிக்கும் எழுந்திருக்கிறது. அதனால் சமீபத்தில் கமலை சந்தித்த அவர், படத்தில் கிடைத்த வருமானத்தைக்கொண்டு, அடமானம் வைத்த வீடு மற்றும் சொத்துக்களை மீட்டு பிள்ளைகளின் பெயரில் எழுதி வையுங்கள். 

இனிமேல் இதுபோன்று வீட்டை அடமானம் வைத்து படம் எடுத்ததையெல்லாம் வெளியில் சொல்ல வேண்டாம். உங்களுக்கு செட்டாகக்கூடிய தயாரிப்பாளர் யாரைவது வைத்து இனி படம் இயக்குங்கள் என்றும் கமலை உரிமையோடு கேட்டுக்கொண்டாராம் ரஜினி.

ரஜினியின் அன்பான அட்வைஸ்க்கு கமல் செவி சாய்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆஸ்தான டைரக்டரிடம் டென்சன் காட்டி வரும் அமலாபால்


வீரசேகரன் படத்தில் அறிமுகமான அமலாபால், அதையடுத்து சிந்து சமவெளி என்ற படத்தில் காமக்கொடூர நடிகையாக அவதரித்தார். அதன் பின்னர் மைனா அவருக்கு கைகொடுத்ததால் நல்ல நடிகை என்ற முத்திரை விழுந்தது. 

அதையடுத்து, மார்க்கெட்டை கெட்டியாக பிடித்துக்கொண்ட அவர், தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி போன்ற சில படங்களுக்குப்பிறகு, சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நிமிர்ந்து நில் என்ற படத்தில் நடித்து வந்தார். 

அந்த நேரம் பார்த்து அவரே எதிர்பாராத வகையில் அவரது அபிமானத்துக்குரிய டைரக்டர் விஜய் இயக்கும் தலைவா படத்தில் இளையதளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அரிய வாய்ப்பினை பெற்றார்.

அமலாபாலின் கேரியரில் தலைவா மிக முக்கியமான படம் என்பதால், தெலுங்கு படங்களுக்கு கொடுத்திருந்த கால்சீட்டைகூட அட்ஜஸ்ட் பண்ணி வாங்கி தலைவாவில் கமிட்டானார். 

இதனால் திடுதிப்பென்று விஜய்யுடன் அமலாபால் ஜோடி சேர்ந்ததால் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளெல்லாம் ஆச்சரியமாய் அவரை பார்த்தனர். 

ஆனால் அந்த ஆச்சர்யம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. இப்போது அதே படத்தில் முக்கிய நாயகியாக பாலிவுட் நடிகை ராகினி நடிப்பதாக செய்திகள் வந்துள்ளன. 

இதனால் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் அமலாபால். ஆனால், இந்த நேரத்தில் அவரது கோலிவுட் அபிமானிகள் ஆளாளுக்கு போன் போட்டு, அப்படியா சங்கதி? இன்னொரு நடிகையும் இந்த படத்தில் இருக்கிறாராமே? என்று அமலாவுக்கு போன்போட்டு துக்கம் விசாரிப்பது போல விசாரிக்கிறார்களாம். 

இதனால் சில தினங்களாக ஏதோ பேசி சமாளித்து வந்த நடிகை, இப்போது தனது போனையே சுவிட் ஆப் செய்து விட்டாராம். அதோடு, தனது ஆஸ்தான டைரக்டரான விஜய்யிடமும் இப்போது முகம் கொடுத்தே பேசாமல் விலகிய நிற்கிறாராம் அமலாபால்.

நயன்தாரா சாயலில் மீண்டுமொரு நடிகை


நயன்தாரா சாயலில் மீண்டுமொரு நடிகை அதே கேரளத்தில் இருந்து கோடம்பாக்கத்துக்கு இறக்குமதியாகியிருக்கிறார். அவரை தமிழுக்கு கொண்டு வந்தவர் களவாணிப்பட இயக்குனரான சற்குணம். 

தனுஷ் நடிக்கும் நய்யாண்டி படத்துக்காக ஒப்பந்தமான இந்த நஸ்ரியா நசீம், அந்த படத்தில் நடித்து வரும்போதே இப்போது நேரம் என்றொரு படத்திலும் கமிட்டாகி விட்டார். 

அவரைப்பார்ப்பவர்கள், அசப்பில் நயன்தாரா சாயலில் இருப்பதாகவும் சொல்ல, இப்போது அடுத்த நயன்தாரா வந்து விட்டார் என்பதுபோல் சிலர் புதுமுக நடிகைக்கு பப்ளிசிட்டி செய்து வருகிறார்கள். 

இந்த சேதி நயன்தாராவின் காதுகளை எட்ட, கடுப்பில் இருக்கிறாராம். எத்தனை நடிகைகள் வந்தாலும் என் இடத்தை பிடிக்க முடியாது என்றும் ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்டுகிறாராம்.

அதுமட்டுமின்றி, இதேபோன்றுதான் முன்பு மேக்னாராஜ் என்ட்ரி ஆனபோதும் பெரிதாக பில்டப் கொடுத்தார்கள். அடுத்த நயன்தாரா என்று சொல்லி என்னை வெறுப்பேத்தினார்கள். 

நிலைமை என்னாச்சு, அந்த நடிகை இருக்கிற இடமே தெரியவில்லை. அதனால் என் சாயலில் எத்தனை நடிகைகள் வந்தாலும் எனது மார்க்கெட்டை அசைக்க முடியாது. 

அதனால் புது வரவு நடிகைகளின் பெயரை சொல்லி என்னை டென்சன் செய்யாதீர்கள் என்று தன்னிடம் அந்த செய்திகளை பாஸ் பண்ணும் நபர்களிடம் சொல்கிறாராம் நயன்தாரா. 

ஆனால் இப்போது அவர் சாயலில் அறிமுகமாகியிருக்கும், நஸ்ரியா நசீமோ, முதல் படத்திலேயே ஹன்சிகா மாதிரி தனுசுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார். 

அதனால் நயன்தாராவை மிஞ்சிய ஆர்ட்டிஸ்டாக அவர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் கோலிவுட் பிரபலங்கள்.

விஸ்வரூபம் - மீண்டும் பிரச்னையை கிளப்பும் அமீர்


விடுதலைப் புலிகளை போலத்தான், தலிபான்களும் தங்கள் நாட்டுக்காக போராடுகின்றனர், அவர்களை விஸ்வரூபம் படத்தில் தப்பாக சித்தரித்துள்ளனர் என்று கூறியுள்ளார் டைரக்டர் அமீர். 

பிரச்னைகள் பல கடந்து, தடைகள் பல கடந்து, விஸ்வரூபம் படம் ரிலீஸாகி வசூலிலும் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் புதிதாக ஒரு பரபரப்பை கிளப்பி வருகிறார் டைரக்டர் அமீர். 

அவர் அளித்த பேட்டி ஒன்றில், விஸ்வரூபம் படத்தில் ஆப்கன் மக்களுக்காவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் ‌போராடும் போராளியை தவறாக சித்தரித்து உள்ளனர். 

இலங்கையில் ஈழத்திற்காக விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் எப்படி போராடினார்களோ, அவர்களை தவறாக சித்தரித்தால் என்ன நிகழுமோ அப்படித்தான் விஸ்வரூபம் படமும். 

எப்படி இந்த போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக் கூடாதோ அப்படித்தான் தலிபான் போராளிகளையும், தீவிரவாதிகள் என்று சொல்ல படத்தில் காட்டக் கூடாது. 

ஆனால் இங்குள்ள அமைப்புகளோ, கட்சிகளோ இதை எதிர்க்காமல் விட்டு விட்டார்கள். 

எனவே விஸ்வரூபம் படத்தில் தன் மண்ணுக்காக போராடும் தலிபான்களை, விஸ்வரூபம் படத்தில் தவறாக சித்தரித்து இருப்பது உண்மை தான் என்று கூறியுள்ளார்.  

அமீரின் இந்த பேச்சு, மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்ப தூண்டுவது போல அமைந்துள்ளது.

ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் அறிமுகம்


இசை அமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் சொந்தமாக தயாரித்து, இசை அமைத்து இயக்கும் படம் "கேரள நாட்டிளம் பெண்களுடனே". இதில் அபி என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். 

காயத்ரி, தீட்ஷிதா, அபிராமி என மூன்று ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். மூவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள். 

இதுபற்றி இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் கூறியதாவது: கதைப்படி ஹீரோவின் தந்தை ஞானசம்பந்தம் தன் இளம் பிராயத்தில் ஒரு கேரள பெண்ணை காதலித்திருப்பார். 

அந்த காதல் தோல்வியடைந்து விடும். இருந்தாலும் கேரளாவையும், அந்த கலாச்சாரத்தையும் காதலிப்பார். தன் மகன் ஒரு கேரளப் பெண்ணைத்தான் காதலித்து மணக்க வேண்டும் என்பது அவரது லட்சியம். அதற்காக மகனை கேரளாவுக்கு அனுப்புகிறார். 

கேரளாவில் ஹீரோ சந்திக்கும் மூன்று பெண்கள்தான் ஹீரோயின்கள். இதற்காக அச்சு அசலான கேரள முகத்தை தேடி அலைந்தேன். சுமார் 6 மாதங்கள் தேடியதில் கிடைத்தவர்கள்தான் காயத்ரி, தீட்ஷிதா, அபிராமி. 

மூன்று பேருக்கும் நடிப்புச் சொல்லிக் கொடுத்து நடிக்க வைப்பதற்குள் பெரும் போராட்டமாகி விட்டது. மூன்று பேருமே படத்தில் மலையாளம்தான் பேசுவார்கள். அதனால் அவர்களே டப்பிங் பேசி உள்ளனர்.

கேரளாவில் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக தங்கியிருந்து படத்தை முடித்து திரும்பி விட்டேன். படத்தில் மொத்தம் 6 பாடல்கள் போட்டிருக்கிறேன். 

அதில் ஒரு பாட்டு கேரள கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். கேரள மக்களுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் உள்ள உறவை சொல்லும் பாடலாக இருக்கும். அடுத்த மாதம் ரிலீஸ் பண்ண திட்டமிட்டிருக்கிறேன் என்றார்.

நன்றி மறந்த சினிமாக்காரர்கள் - த்ரிஷா வேதனை


10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இடம் பிடித்திருக்கும் முக்கிய நடிகை த்ரிஷா. ரஜினி தவிர அனைத்து முன்னணி நடிகர்களுடனும் டூயட் பாடி விட்ட பெருமை இவருக்கு உண்டு. 

ஆனால் சமீகாலமாக, மேல்தட்டு ஹீரோக்களின் படங்கள் இவருக்கு கிடைக்கவில்லை. மாறாக, இரண்டாம் தட்டு நடிகர்களான, ஜெயம்ரவி, விஷால், ஜீவா போன்ற நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று வருகிறார். 

ஆனால் அடுத்தபடியாக பார்த்தால், அந்த வாய்ப்புகளும் இல்லை. ரம் என்ற படத்தில் 4 நடிகைகளுள் ஒருவராக நடிக்கிறார் த்ரிஷா. 

ஆனால் அவர் எதிர்பார்த்து முயற்சி எடுத்த எந்த முன்னணி ஹீரோக்களின் படங்களும் அவருக்கு கிடைக்கவில்லையாம். அதனால் மனசொடிந்து போயிருக்கிறார் த்ரிஷா.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த சினிமாவில் என்னை வளர்த்து விட்டவர்களும் இருக்கிறார்கள். அதேபோல் என்னால் பெரிய ஆளாய் ஆனவர்களும் இருக்கிறார்கள். 

ஆனால் இப்போது அப்படி என்னால் வளர்ந்த சில இயக்குனர்களே என்னைப்பார்த்தால் கண்டும் காணாததும் போல் போய் விடுகிறார்கள். தொடர்ச்சியாக என்னுடன் டூயட் பாடிய ஹீரோக்களே வேறு நடிகைகளுடன் தோள் போட்டுக்கொண்டு ஜாலி நடை போடுகிறார்கள். 

ஆனால் எதிரில் நான் நிற்பதுகூட அவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு நண்பர்களும் நன்றி மறந்தவர்களாக இருக்கிறார்கள். புதிது புதிதாக நடிகைகள் வந்து கொண்டேயிருப்பதால், என்போன்ற நடிகைகளை பழைய துணிகளைப்போன்று ஓரங்கட்டுகிறார்கள். 

இப்படி நன்றி மறந்த மனிதர்களைப்பார்க்கும்போது, இப்படிப்பட்ட சினிமாவிலா இத்தனை ஆண்டுகளாக இருந்தோம் என்று மனசு வேதனைப்படுகிறது என்கிறார் த்ரிஷா.

மணிரத்னம் மீது ஒரே நாளில் 7 புகார்கள்


இயக்குனர் மணிரத்னத்திடம் இருந்து நிவாரணம் பெற்றுத் தரக் கோரி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில், திரைப்பட விநியோகஸ்தர்கள் ஏழு பேர் புகார் செய்துள்ளனர்.

நெல்லையை சேர்ந்த, ராகவேந்திரா பிலிம்ஸ் உரிமையாளர் பாலாஜி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்: 

திரைப்பட இயக்குனர் மணிரத்னம் தயாரித்து, இயக்கிய, கடல் திரைப்படத்தை நெல்லை பகுதிக்கான விநியோக உரிமையை, 65 லட்ச ரூபாய் கொடுத்து பெற்றேன். 

டைரக்டர் மணிரத்னத்தின் மீது, நம்பிக்கை வைத்தே, இந்த திரைப்படத்தை வெளியிடும் உரிமையை வாங்கினேன். ஆனால், படம் ஒரு வாரம் கூட உருப்படியாக ஓடவில்லை. 

இதனால், கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, மணிரத்னத்திடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புரசைவாக்கத்தை சேர்ந்த பழனி கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மணிரத்னம் தான் தயாரித்த இருவர், கன்னத்தில் முத்தமிட்டால் படங்கள் தோல்வி அடைந்தபோது, நஷ்ட ஈடு கொடுத்தார். 

ஆனால், கடல் படத்தை மற்றொரு பங்குதாரருமான மனோகர் பிரசாத்திடம் கொடுத்து விட்டதாகவும், தனக்கு எந்த சம்மந்தமும் இல்லை எனவும், பொய் பேசி வருகிறார். அவரிடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதே போல், புதுச்சேரியை சேர்ந்த கண்ணன், சுபாஷ் சந்திரபோஸ், திருச்சி ராமதாஸ், சேலம் ஸ்ரீதர், விருகம்பாக்கம் செந்தில் என, மொத்தம் ஏழு பேர், மணிரத்னத்திடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தரக் கோரி, ஒரே நாளில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

பவர் ஸ்டாருக்கு ஜோடியானர் நமீதா


கொடுக்கிற கடவுள் கூரைய பிச்சுக்கிட்டு கொடுப்பார்னு சொல்வாங்க. இப்போ கடவுள் கொடுத்துக்கிட்டு இருக்கிறது பவர் ஸ்டாருக்கு. 

கண்ணா லட்டு தின்ன ஆசையான்னு எல்லாரையும் பார்த்த கேட்டுபுட்டு டன் கணக்குல லட்டு திங்குறது பவர் ஸ்டார்தான். 

நிறைய படங்கள்ல குத்துப்பாட்டு, மூன்று படங்கள் காமெடின்னு மனுஷன் காட்டுல இப்போ லட்டு மழை இல்லீங்க துட்டு மழை. 

தான் தயாரித்த, இயக்கிய, நடித்த படங்களை அப்படியே தூக்கி பரன்ல போட்டுவிட்டு ராத்திரி பகலா நடிச்சிக்கிட்டிருக்காரு. 

ஒரு நாளைக்கு மூன்று லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை சம்பளம் வாங்கிக் கொண்டு ரிச் கேர்ளோடு ஆட்டம் போடுகிறார்.

இதன் உச்சகட்டமாக ஒரு கட்டிட கம்பெனி விளம்பரத்துல நமீதாவுக்கு ஜோடியாக நடிச்சிருக்காரு. 

பல கட்டிட வேலைகள்ல தில்லுமுல்லு பண்ணினதா பவர்மேல ஏகப்பட்ட வழக்கு இருந்தாலும் நாம் கட்டிடம் கட்ட இந்த விளம்பரத்துல ஆலோசனை சொல்றார். 

காற்றுள்ளபோதே தூற்றிக் கொண்டிருக்கிறார் மனுஷன். 
Related Posts Plugin for WordPress, Blogger...