விஸ்வரூபம் - மீண்டும் பிரச்னையை கிளப்பும் அமீர்


விடுதலைப் புலிகளை போலத்தான், தலிபான்களும் தங்கள் நாட்டுக்காக போராடுகின்றனர், அவர்களை விஸ்வரூபம் படத்தில் தப்பாக சித்தரித்துள்ளனர் என்று கூறியுள்ளார் டைரக்டர் அமீர். 

பிரச்னைகள் பல கடந்து, தடைகள் பல கடந்து, விஸ்வரூபம் படம் ரிலீஸாகி வசூலிலும் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் புதிதாக ஒரு பரபரப்பை கிளப்பி வருகிறார் டைரக்டர் அமீர். 

அவர் அளித்த பேட்டி ஒன்றில், விஸ்வரூபம் படத்தில் ஆப்கன் மக்களுக்காவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் ‌போராடும் போராளியை தவறாக சித்தரித்து உள்ளனர். 

இலங்கையில் ஈழத்திற்காக விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் எப்படி போராடினார்களோ, அவர்களை தவறாக சித்தரித்தால் என்ன நிகழுமோ அப்படித்தான் விஸ்வரூபம் படமும். 

எப்படி இந்த போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக் கூடாதோ அப்படித்தான் தலிபான் போராளிகளையும், தீவிரவாதிகள் என்று சொல்ல படத்தில் காட்டக் கூடாது. 

ஆனால் இங்குள்ள அமைப்புகளோ, கட்சிகளோ இதை எதிர்க்காமல் விட்டு விட்டார்கள். 

எனவே விஸ்வரூபம் படத்தில் தன் மண்ணுக்காக போராடும் தலிபான்களை, விஸ்வரூபம் படத்தில் தவறாக சித்தரித்து இருப்பது உண்மை தான் என்று கூறியுள்ளார்.  

அமீரின் இந்த பேச்சு, மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்ப தூண்டுவது போல அமைந்துள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...