இசை அமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் சொந்தமாக தயாரித்து, இசை அமைத்து இயக்கும் படம் "கேரள நாட்டிளம் பெண்களுடனே". இதில் அபி என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
காயத்ரி, தீட்ஷிதா, அபிராமி என மூன்று ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். மூவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
இதுபற்றி இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் கூறியதாவது: கதைப்படி ஹீரோவின் தந்தை ஞானசம்பந்தம் தன் இளம் பிராயத்தில் ஒரு கேரள பெண்ணை காதலித்திருப்பார்.
அந்த காதல் தோல்வியடைந்து விடும். இருந்தாலும் கேரளாவையும், அந்த கலாச்சாரத்தையும் காதலிப்பார். தன் மகன் ஒரு கேரளப் பெண்ணைத்தான் காதலித்து மணக்க வேண்டும் என்பது அவரது லட்சியம். அதற்காக மகனை கேரளாவுக்கு அனுப்புகிறார்.
கேரளாவில் ஹீரோ சந்திக்கும் மூன்று பெண்கள்தான் ஹீரோயின்கள். இதற்காக அச்சு அசலான கேரள முகத்தை தேடி அலைந்தேன். சுமார் 6 மாதங்கள் தேடியதில் கிடைத்தவர்கள்தான் காயத்ரி, தீட்ஷிதா, அபிராமி.
மூன்று பேருக்கும் நடிப்புச் சொல்லிக் கொடுத்து நடிக்க வைப்பதற்குள் பெரும் போராட்டமாகி விட்டது. மூன்று பேருமே படத்தில் மலையாளம்தான் பேசுவார்கள். அதனால் அவர்களே டப்பிங் பேசி உள்ளனர்.
கேரளாவில் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக தங்கியிருந்து படத்தை முடித்து திரும்பி விட்டேன். படத்தில் மொத்தம் 6 பாடல்கள் போட்டிருக்கிறேன்.
அதில் ஒரு பாட்டு கேரள கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். கேரள மக்களுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் உள்ள உறவை சொல்லும் பாடலாக இருக்கும். அடுத்த மாதம் ரிலீஸ் பண்ண திட்டமிட்டிருக்கிறேன் என்றார்.
0 comments:
Post a Comment