நயன்தாரா சாயலில் மீண்டுமொரு நடிகை அதே கேரளத்தில் இருந்து கோடம்பாக்கத்துக்கு இறக்குமதியாகியிருக்கிறார். அவரை தமிழுக்கு கொண்டு வந்தவர் களவாணிப்பட இயக்குனரான சற்குணம்.
தனுஷ் நடிக்கும் நய்யாண்டி படத்துக்காக ஒப்பந்தமான இந்த நஸ்ரியா நசீம், அந்த படத்தில் நடித்து வரும்போதே இப்போது நேரம் என்றொரு படத்திலும் கமிட்டாகி விட்டார்.
அவரைப்பார்ப்பவர்கள், அசப்பில் நயன்தாரா சாயலில் இருப்பதாகவும் சொல்ல, இப்போது அடுத்த நயன்தாரா வந்து விட்டார் என்பதுபோல் சிலர் புதுமுக நடிகைக்கு பப்ளிசிட்டி செய்து வருகிறார்கள்.
இந்த சேதி நயன்தாராவின் காதுகளை எட்ட, கடுப்பில் இருக்கிறாராம். எத்தனை நடிகைகள் வந்தாலும் என் இடத்தை பிடிக்க முடியாது என்றும் ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்டுகிறாராம்.
அதுமட்டுமின்றி, இதேபோன்றுதான் முன்பு மேக்னாராஜ் என்ட்ரி ஆனபோதும் பெரிதாக பில்டப் கொடுத்தார்கள். அடுத்த நயன்தாரா என்று சொல்லி என்னை வெறுப்பேத்தினார்கள்.
நிலைமை என்னாச்சு, அந்த நடிகை இருக்கிற இடமே தெரியவில்லை. அதனால் என் சாயலில் எத்தனை நடிகைகள் வந்தாலும் எனது மார்க்கெட்டை அசைக்க முடியாது.
அதனால் புது வரவு நடிகைகளின் பெயரை சொல்லி என்னை டென்சன் செய்யாதீர்கள் என்று தன்னிடம் அந்த செய்திகளை பாஸ் பண்ணும் நபர்களிடம் சொல்கிறாராம் நயன்தாரா.
ஆனால் இப்போது அவர் சாயலில் அறிமுகமாகியிருக்கும், நஸ்ரியா நசீமோ, முதல் படத்திலேயே ஹன்சிகா மாதிரி தனுசுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார்.
அதனால் நயன்தாராவை மிஞ்சிய ஆர்ட்டிஸ்டாக அவர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் கோலிவுட் பிரபலங்கள்.
0 comments:
Post a Comment