விஜய் நடித்து வரும் தலைவா படத்தில் அமலாபால் நாயகியாக நடித்து வந்தார். அவரையடுத்து இப்போது விஜய்யின் மும்பை காதலியாக ராகினி என்ற பாலிவுட் நடிகை இணைக்கப்பட்டு அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் மும்பையிலேயே படமாக்கிவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார் இயக்குனர் விஜய்.
வந்த வேகத்தில் சென்னையிலுள்ள பின்னி மில்லில் ஒரு அயிட்டம் பாடலை படமாக்கியிருக்கிறார்.
அந்த பாடலில் ஆடுவதற்கும் பாலிவுட் கவர்ச்சிப்புயல் கிரண் என்றொரு நடிகையை கொண்டு வந்திருக்கிறார்.
இந்தி சினிமாவில் தனது அதிரடி ஆட்டத்தால் இளவட்ட ரசிகர்களின் நாடி நரம்புகளில துடித்துக்கொண்டிருக்கும் இந்த கிரண், தலைவா பட பாடலுக்கு இன்னும் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளாராம்.
தமிழில் ஏற்கனவே மல்லிகா ஷெராவத் போன்ற பாலிவுட் நடிகைகள் ஆடியிருக்கும் நிலையில், அவரைப்போன்றோர்களை மிஞ்சும் வகையில் தனது ஆட்டம் இருக்க வேண்டுமென்று செமத்தியாக ஆடியுள்ளாராம் கிரண்.
அவருடன் மேலும் ஐந்து மும்பை அழகிகளும் இணைந்து ஆடியிருக்கிறார்களாம்.
அமலாபால், ராகினி என்று இரண்டு நடிகைகள்இருக்குமபோது இன்னொரு கவர்ச்சி நடிகையை இறக்கி விட்டது ஏன்? என்று இயக்குனரைக்கேட்டால், அயிட்டம் பாடல்களில் அற்புதமாக ஆட வேண்டும்.
அதோடு, தேவையான கிளாமரையும் தயக்கமின்றி காண்பித்து நடிக்க வேண்டும். ஆனால் கதாநாயகிகள் ஒரு லிமிட் வைத்திருப்பார்கள்.
அதை விட்டு இறங்கி வர தயங்குவார்கள். அதனால்தான் போதும் போதும் என்கிற அளவுக்கு கிளாமர் காட்டி நடிக்கும் கிரணை கூட்டி வந்து விட்டேன் என்கிறார்.
0 comments:
Post a Comment