நன்றி மறந்த சினிமாக்காரர்கள் - த்ரிஷா வேதனை


10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இடம் பிடித்திருக்கும் முக்கிய நடிகை த்ரிஷா. ரஜினி தவிர அனைத்து முன்னணி நடிகர்களுடனும் டூயட் பாடி விட்ட பெருமை இவருக்கு உண்டு. 

ஆனால் சமீகாலமாக, மேல்தட்டு ஹீரோக்களின் படங்கள் இவருக்கு கிடைக்கவில்லை. மாறாக, இரண்டாம் தட்டு நடிகர்களான, ஜெயம்ரவி, விஷால், ஜீவா போன்ற நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று வருகிறார். 

ஆனால் அடுத்தபடியாக பார்த்தால், அந்த வாய்ப்புகளும் இல்லை. ரம் என்ற படத்தில் 4 நடிகைகளுள் ஒருவராக நடிக்கிறார் த்ரிஷா. 

ஆனால் அவர் எதிர்பார்த்து முயற்சி எடுத்த எந்த முன்னணி ஹீரோக்களின் படங்களும் அவருக்கு கிடைக்கவில்லையாம். அதனால் மனசொடிந்து போயிருக்கிறார் த்ரிஷா.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த சினிமாவில் என்னை வளர்த்து விட்டவர்களும் இருக்கிறார்கள். அதேபோல் என்னால் பெரிய ஆளாய் ஆனவர்களும் இருக்கிறார்கள். 

ஆனால் இப்போது அப்படி என்னால் வளர்ந்த சில இயக்குனர்களே என்னைப்பார்த்தால் கண்டும் காணாததும் போல் போய் விடுகிறார்கள். தொடர்ச்சியாக என்னுடன் டூயட் பாடிய ஹீரோக்களே வேறு நடிகைகளுடன் தோள் போட்டுக்கொண்டு ஜாலி நடை போடுகிறார்கள். 

ஆனால் எதிரில் நான் நிற்பதுகூட அவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு நண்பர்களும் நன்றி மறந்தவர்களாக இருக்கிறார்கள். புதிது புதிதாக நடிகைகள் வந்து கொண்டேயிருப்பதால், என்போன்ற நடிகைகளை பழைய துணிகளைப்போன்று ஓரங்கட்டுகிறார்கள். 

இப்படி நன்றி மறந்த மனிதர்களைப்பார்க்கும்போது, இப்படிப்பட்ட சினிமாவிலா இத்தனை ஆண்டுகளாக இருந்தோம் என்று மனசு வேதனைப்படுகிறது என்கிறார் த்ரிஷா.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...