ஆஸ்தான டைரக்டரிடம் டென்சன் காட்டி வரும் அமலாபால்


வீரசேகரன் படத்தில் அறிமுகமான அமலாபால், அதையடுத்து சிந்து சமவெளி என்ற படத்தில் காமக்கொடூர நடிகையாக அவதரித்தார். அதன் பின்னர் மைனா அவருக்கு கைகொடுத்ததால் நல்ல நடிகை என்ற முத்திரை விழுந்தது. 

அதையடுத்து, மார்க்கெட்டை கெட்டியாக பிடித்துக்கொண்ட அவர், தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி போன்ற சில படங்களுக்குப்பிறகு, சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நிமிர்ந்து நில் என்ற படத்தில் நடித்து வந்தார். 

அந்த நேரம் பார்த்து அவரே எதிர்பாராத வகையில் அவரது அபிமானத்துக்குரிய டைரக்டர் விஜய் இயக்கும் தலைவா படத்தில் இளையதளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அரிய வாய்ப்பினை பெற்றார்.

அமலாபாலின் கேரியரில் தலைவா மிக முக்கியமான படம் என்பதால், தெலுங்கு படங்களுக்கு கொடுத்திருந்த கால்சீட்டைகூட அட்ஜஸ்ட் பண்ணி வாங்கி தலைவாவில் கமிட்டானார். 

இதனால் திடுதிப்பென்று விஜய்யுடன் அமலாபால் ஜோடி சேர்ந்ததால் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளெல்லாம் ஆச்சரியமாய் அவரை பார்த்தனர். 

ஆனால் அந்த ஆச்சர்யம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. இப்போது அதே படத்தில் முக்கிய நாயகியாக பாலிவுட் நடிகை ராகினி நடிப்பதாக செய்திகள் வந்துள்ளன. 

இதனால் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் அமலாபால். ஆனால், இந்த நேரத்தில் அவரது கோலிவுட் அபிமானிகள் ஆளாளுக்கு போன் போட்டு, அப்படியா சங்கதி? இன்னொரு நடிகையும் இந்த படத்தில் இருக்கிறாராமே? என்று அமலாவுக்கு போன்போட்டு துக்கம் விசாரிப்பது போல விசாரிக்கிறார்களாம். 

இதனால் சில தினங்களாக ஏதோ பேசி சமாளித்து வந்த நடிகை, இப்போது தனது போனையே சுவிட் ஆப் செய்து விட்டாராம். அதோடு, தனது ஆஸ்தான டைரக்டரான விஜய்யிடமும் இப்போது முகம் கொடுத்தே பேசாமல் விலகிய நிற்கிறாராம் அமலாபால்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...