கமலுக்கு அட்வைஸ் செய்த ரஜினிகாந்த்


ரஜினி, கமல் இருவரும் ஆரம்ப காலத்தில் இருந்தே சினிமாவில் ஒன்றாக நடித்தவர்கள். அதையடுத்து அவர்கள் வெவ்வேறு பாதைகளில் பயணித்தாலும், அவர்களுக்கிடையிலான நட்பு என்பது மாறாமலேயே இருந்து வருகிறது. 

அதை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் விஸ்வரூபம் படத்துக்கு அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டபோது, முதல் ஆளாக அதற்கு குரல் கொடுத்தவர் ரஜினிதான். 

அதன்பிறகுதான் மற்ற திரையுலகினர் ஆதரவு கொடுத்தனர். அதையடுத்து, படம் வெளியாகி 200 கோடி வரை வசூலை ஈட்டியிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் இந்த சூழ்நிலையிலும், தான் குடியிருக்கும் வீட்டை தனியாரிடம் அடகு வைத்திருந்த கமல், அதை மீண்டு மீண்டும் வங்கியில் அடமானம் வைத்தார். 

இதனால் விஸ்வரூபம்தான் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறதே. இந்த நேரத்தில் அதற்காக மீண்டும் வீட்டை அடகு வைக்க வேண்டும் என்று கமலின் அபிமானிகள் பலருக்கு கேள்வி எழுந்தது. 

அதேகேள்வி ரஜினிக்கும் எழுந்திருக்கிறது. அதனால் சமீபத்தில் கமலை சந்தித்த அவர், படத்தில் கிடைத்த வருமானத்தைக்கொண்டு, அடமானம் வைத்த வீடு மற்றும் சொத்துக்களை மீட்டு பிள்ளைகளின் பெயரில் எழுதி வையுங்கள். 

இனிமேல் இதுபோன்று வீட்டை அடமானம் வைத்து படம் எடுத்ததையெல்லாம் வெளியில் சொல்ல வேண்டாம். உங்களுக்கு செட்டாகக்கூடிய தயாரிப்பாளர் யாரைவது வைத்து இனி படம் இயக்குங்கள் என்றும் கமலை உரிமையோடு கேட்டுக்கொண்டாராம் ரஜினி.

ரஜினியின் அன்பான அட்வைஸ்க்கு கமல் செவி சாய்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...