எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ் நடிகர்களில் ரஜினி அரசியலுக்கு வந்து ஆட்சி பீடத்தில் அமருவார் என்பது நீண்டகாலமாக கணிக்கப்பட்டு வந்த ஆரூடம்.
அவரும் அதற்கேற்றார் போல் தான் நடித்த படங்களில் அரசியல் பஞ்ச் டயலாக்குகளையும் அவ்வப்போது விட்டு வந்ததால் ரசிகர்களாலும், மக்களாலும் ரொம்ப எதிர்பார்க்கப்பட்டவராக இருந்தார் ரஜினி.
ஆனால் விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு அந்த எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும் மங்கத் தொடங்கின.
ஆனால் ரஜினியின் ரசிகர்கள் மட்டும் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்று அவருக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த மாதம் 12-ந்தேதி தனது பிறந்த நாள் விழாவில் ரசிகர்களை சந்தித்து பேசினார் ரஜினி.
அதையடுத்து சென்னை மாவட்ட தலைமை மன்ற நிர்வாகிகளை தனது ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது, எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவது பற்றி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கேட்டதற்கு, சரியான சூழல் அமைந்தால்தான் அது சாத்தியம் என்று சொன்ன ரஜினி, ரசிகர்களின் அழைப்புக்காக அரசியலுக்கு வந்து கையைசுட்டக்கொண்ட சில நடிகர்களின் கதை நமக்கும் ஆகிவிடக்கூடாது என்றாராம்.
மேலும், நாம் அரசியலுக்கு வருவது ஏதோ ஒப்புக்காக இருக்கக்கூடாது.
வந்தால் அதிகாரத்தை கையிலெடுத்து நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும் சூழல் அமைந்தால் மட்டுமே அரசியலுக்கு வர வேண்டும் என்றாராம்.
0 comments:
Post a Comment