கமலுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆகும் வரை தனது தலைவா படத்தின் ஷூட்டிங்கை நிறுத்தி வைத்துள்ளார் நடிகர் விஜய்.
கமலின் விஸ்வரூபம் பிரச்னை தமிழ்நாட்டை கடந்து இந்தியா முழுக்க பேசப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை விட்டே தான் வெளியேற போவதாக கமல் அறிவித்ததைதொடர்ந்து தமிழ் திரையுலகினர் தவிர்த்து பிறமாநில திரையுலகினரும் தங்களது ஆதரவை கமலுக்கு கொடுத்து வருகின்றனர்.
ஆனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யோ இதுவரை எந்த ஒரு பேட்டியோ, அறிக்கையோ கொடுக்கவில்லை.
இந்நிலையில் இப்போது முதன்முறையாக கமலுக்கு குரல் கொடுத்துள்ளார்.
விஸ்வரூபம் படம் வெளியாகும் வரை தான் நடித்து வரும் தலைவா படத்தின் ஷூட்டிங் நடக்காது என்று கூறியுள்ளார்.
மேலும் கமல் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment