இளைய தளபதி என்று எல்லோராலும் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். நடிகர் மட்டும் அல்ல, சிறந்த நடனமும் ஆடுபவர். அதோடு மட்டுமல்லாது அவ்வப்போது பாட்டும் பாடி அசத்துவார்.
இவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ளன. சமீபத்தில் துப்பாக்கியில்
இவர் பாடிய கூகுள் கூகுள்... பாட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், துப்பாக்கி படத்திற்கு ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்.
தலைவா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ஒரு கலக்கலான பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் விஜய். இவருடன் காமெடி நடிகர் சந்தானமும் இணைந்து பாடியுள்ளார்.
இதுகுறித்து ஜீ.வி.பிரகாஷ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, சில தினங்களுக்கு முன்னர் தான் விஜய்யின் குரலில் பாடல் முழுவதுமாக பதிவு செய்யப்பட்டது. விஜய்யுடன், சந்தானமும் பாடியிருக்கிறார்.
பாடலும் நன்றாக வந்துள்ளது. ரசிகர்களுக்கு இந்தப்பாடல் நிச்சயம் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment