நடிகர் கமல் நடித்துள்ள, "விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை கோரி, ரெஜன்ட் சாய்மீரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
அதில் எங்கள் நிறுவனமும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், 2008ம் ஆண்டு, ஏப்ரலில், ஒப்பந்தம் செய்தது. இதற்காக, எங்கள் நிறுவனம், வெவ்வேறு தேதிகளில், 6.90 கோடி வரை, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியது.
ஒப்பந்தம் போட்டு, ஆறு மாதங்கள் வரை, படப்படிப்பு துவங்கவில்லை. படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில், எங்கள் நிறுவனத்துக்கு, 10.50 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தசூழலில் கமலின் விஸ்வரூபம் படம் வருகிற 11ம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை வெளியிட அனுமதித்தால், எங்களுக்கு வர வேண்டிய பணத்துக்கு உத்தரவாதம் இல்லை.
எனவே இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது.
இதுதொடர்பாக பதிலளிக்கும்படி, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், நடிகர் கமலுக்கு, தனிப்பட்ட முறையில், "நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவிட்டார்.
மேலும் வழக்கு விசாரணையை, ஜன., 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அதன்படி இந்த வழக்கு இன்று(3ம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது கமல் தரப்பில் இருந்து ராஜ்கமல் பிலிம் நிறுவன பங்குதாரர் சந்திரஹாசன் பதில் மனுதாக்கல் செய்தார்.
அதில், விஸ்வரூபம் படம் ரூ.90 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த போது மூன்றரை கோடிக்கு வங்கி உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்போது படநிறுவனத்தின் பெயரை மாற்றி அதே பிரச்னைக்காக மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இது ஏமாற்றும் செயல். ஆகவே விஸ்வரூபம் படத்தை தடை விதிக்க கூடாது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. வழக்கை நீதிபதி வருகிற ஜனவரி 8ம் தேதி ஒத்திவைத்தார்.
0 comments:
Post a Comment