துப்பாக்கியில் விஜய்யின் பாட்டு

துப்பாக்கி படத்தில், ஹீரோவாக நடித்ததுடன் ஒரு பாட்டு ஒன்னு பாடியிருக்கிறார் நடிகர் விஜய். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

இவர்களுடன் ஜெயராம், சத்யன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையை சுற்றி நடப்பதால் மும்பையில் சூட்டிங்கை நடத்தி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்நிலையில், இப்படத்தை பற்றி தினம் ஒரு செய்தி வெளிவந்து கொண்டு இருக்கிறது.

துப்பாக்கியில் விஜய் ஹீரோவாக நடித்து இருப்பதுடன், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அசத்தலான பார்ட்டி சாங் ஒன்றும் பாடியிருக்கிறார்.

இதுகுறித்து ஹாரிஸ் தனது ப்ளாக்கில் கூறியிருப்பதாவது, சும்மா ஒரு முயற்சியாகத்தான் விஜய்யை பாட வைத்தோம்.

ஆனால் அதுவே ரொம்ப நன்றாக வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

மேலும் ரெக்காரீடிங் தியேட்டரில் விஜய் பாடிய போட்‌டோவையும் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே விஜய் பல படங்களிலும், ரசிகர்களின் விருப்பத்திற்காக பல மேடைகளிலும் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் பில்லா-2விலும் நயன்தாரா

சினிமாவில் ரீ-எண்ட்ரியாகி இருக்கும் நடிகை நயன்தாரா, அஜித்தின் பில்லா-2 படத்தில் கெஸ்ட் ‌ரோலில் வர இருக்கிறாராம்.

கடந்த 2007ம் ஆண்டு அஜித், நயன்தாரா, நமீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் பில்லா.

இப்படத்தில் அஜித்தின் அசத்தலான நடிப்பு, பின்னணி இசை, விஷ்ணுவர்தனின் விறுவிறுப்பான திரைக்கதை தவிர, படத்திற்கு நயன்தாரா-நமீதாவின் கவர்ச்சி காம்பினேஷனும் ப்ளஸ் பாயிண்டாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.

இந்நிலையில் பில்லா படத்தின் இரண்டாம் பாகமாக பில்லா-2 உருவாகி வருகிறது.

சக்ரி டோல்ட்டி இயக்கும் இப்படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடித்து வருகிறார்.

படத்தின் பெரும்பாலான பகுதி முடிந்துவிட்ட நிலையில், பில்லா-2வில் கெஸ்ட் ரோலில் நடிகை நயன்தாராவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பிரபுதேவாவுடனான காதலை முறித்து கொண்டு சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் நயன்தாரா, தெலுங்கில் ஒரு படத்திலும், தமிழில் அஜித் ஜோடியாக ஒரு படத்திலும் கமிட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலுக்கு வந்தே தீருவேன் - வடிவேலு

நான் அரசியலுக்கு வந்தே தீருவேன்; என்னை யாராலும் தடுக்க முடியாது, என்று வைகைப்புயல் வடிவேலு கூறியிருக்கிறார். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் நடிகர் வடிவேலு பங்கேற்பாரா, மாட்டாரா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்திலும், திரையுலக வட்டாரத்திலும் எழுந்துள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள வடிவேலு, என் தாய் சரோஜினி உடல் நலக்குறைவு காரணமாக மதுரை ஐராவத நல்லூரில் மருத்துவமனையில் உள்ளார். அதனால் என்னால் சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடமுடியவில்லை, என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் தனது பேட்டியில், வடிவேலுவுக்கு அரசியல் எல்லாம் தேவையா என்று சிலர் கேட்கிறார்கள்.

ஓட்டுப்போடும் அத்தனை பேரும் அரசியல்வாதிகள்தான். ஓட்டுப்போடும் மக்களில் நானும் ஒருவன் என்பதால் நானும் அரசியல்வாதிதான்.

தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று என்னை கேட்கிறார்கள். காலமும், சூழ்நிலையும் நிர்ப்பந்நதிக்கும்போது மக்களை சந்திப்பேன்.

நான் யாருக்கும் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளமாட்டேன். தீவிர அரசியலில் குதிப்பேன். அரசியலுக்கு நான் வரக்கூடாது என்று சொல்வது அபத்தம்.

நிச்சயமாக அரசியலுக்கு வந்தே தீருவேன். என்னை யாரும் தடுக்க முடியாது. திரையுலகம் என்னை ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டதாக சொல்கிறார்கள்.

விரைவில் நான் கதாநாயகனாக நடிக்கும் புதுப்பட அறிவிப்பு வெளிவரும் என்று கூறியிருக்கிறார், வடிவேலு.

மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த ஸ்ருதி ஹாசன்

கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி நடிக்க வரும் முன் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக தெரிவித்துள்ளார். கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஆமீர் கானின் மருமகன் இம்ரான் கான் நடித்த லக் படத்தில் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகமானார்.

இந்தியாஸ் கிளாம் திவா என்ற டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ருதி தான் நடிக்க வரும் முன்பு மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாலும் அதை மறைக்கும் நடிகைகளுக்கு மத்தியில் தானாக ஒப்புக் கொண்டுள்ளார் ஸ்ருதி.

மூச்சு விட சிரமமாக இருந்ததால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கே மூக்கில் அறுவை சிகிச்சை செய்தால் பாடகியான தனது குரல் வளம் பாதிக்கப்படுமோ என்று பயந்துள்ளார்.

தற்போது சிகிச்சைக்குப் பிறகு நிம்மதியாக தூங்க முடிகிறது என்றும், பிரச்சனையின்றி பாட முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் லக் கைகொடுக்காவிட்டாலும் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஸ்ருதிக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.

தற்பொழுது ஸ்ருதி நடித்து வரும் 3 படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது கூடுதல் தகவலாகும்

மனம் கொத்தி பறவையில் யுவன் நீக்கப்பட்டது ஏன்...?

துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம், தீபாவளி போன்ற படங்களை இயக்கிய எழில், நீண்ட இடைவெளிக்கு பிறகு "மனம் கொத்தி பறவை" எனும் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் ஹீரோவாக விஜய் டி.வி., புகழ் மற்றும் சமீபத்தில் மெரினா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

இவருக்கு ‌ஜோடியாக புதுமுகம் ஆத்மியா என்பவர் நடிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் வளர்ந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு முதலில் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க இருந்தார். பின்னர் அவர் நீக்கப்பட்டு இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதுகுறித்து எழில் கூறுகையில், ஆரம்பத்தில் யுவன் தான் இசையமைக்க இருந்தார்.

ஆனால் இப்படத்தின் பட்ஜெட்டிற்கு, யுவனின் இசையமைப்பு ஒத்துவராது என்பதால், அவருக்கு பதிலாக இமானை இசையமைக்க வைத்தோம்.

இமானும் ரொம்ப திறமையானவர் தான். யுவனிடம் நான் என்ன எதிர்பார்த்தேனோ, அதை இமான் நிச்சயம் செய்வார். அதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்றார்.

சிவகார்த்திகேயன் குறித்து கூறுகையில், நான் அஜித், விஜய், ஜெயம் ரவி உள்ளிட்ட ஹீரோக்களுடன் பணியாற்றி இருக்கிறேன்.

இவர்கள் எல்லோரும் இன்று டாப் ஸ்டாராக இருக்கிறார்கள். அதுபோல சிவகார்த்தி‌கேயனுக்கும் டாப் ஸ்டாராக எல்லா தகுதியும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

வாய்ப்புக்காக பொய் சொல்கிறார் அசின்

வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக கண்டபடி பொய் சொல்வதாக நடிகை அசின் மீது பிரபல சினிமா டைரக்டர் ரோஹித் ஷெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய படம் இயக்கப் போகிறார் ரோஹித் ஷெட்டி. இப்படத்தில் நடிகர் ஷாரூக்கான் ஹீரோவாக நடிக்கிறார்.

ஹீரோயினாக நடிக்கும் நடிகை பற்றி இன்னமும் முடிவு செய்யப்படாத நிலையில், நடிகை அசின், நான் தான் சென்னை எக்ஸ்பிரஸ் நாயகி என்றும், ஒப்பந்தம் கூட கையெழுத்தாகிவிட்டது என்றும் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தியை படித்த டைரக்டர் ரோஹித் ரொம்பவே கடுப்பாகி விட்டாராம்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், அசின் சொல்லியிருப்பது பொய். போல் பச்சனில் நடிப்பதால் அவர் சென்னை எக்ஸ்பிரஸிலும் ஹீரோயின் என்று சொல்லியிருப்பார் போலிருக்கிறது.

இப்போதைக்கு போல் பச்சான் முடித்தபிறகுதான், சென்னை எக்ஸ்பிரஸ் குறித்துப் பேசுவேன்.

அதுவரை அசின் சொல்வதை யாரும் நம்ப வேண்டாம். வாய்ப்புக்காக கண்டபடி பொய் பேசி வருகிறார் அசின், என்று கூறியுள்ளார்.

சகுனி திரைப்படம் ஒரு முன்னோட்டம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் ஆன்டனி சேவியர் தயாரிப்பில் "பருத்திவீரன்" கார்த்தி நடிக்கும் படம் "சகுனி".

அரசியல்வாதிகளின் பின்னணியை கதைகளமாக்கி உருவாகிவரும் இப்படத்தில் முற்றிலும் வித்யாசமான வேடத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

கார்த்திக்கு ஜோடியாக உதயன் படத்தின் நாயகி ப்ரனிதா நடிக்கிறார்.

இவர்களுடன் காமெடியில் சந்தானமும் கலக்க உள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு வேலையை கவனிக்கிறார்.

இப்படத்தை கதை, திரைக்கதை அமைத்து புதுமுகம் சங்கர் தயால் என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ் தயாராகியுள்ளது. வருகிற ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

வாளமீனுக்கும், விலாங்கு மீனுக்கும் புகழ் முத்துராஜா மரணம்

மிஷ்கினின், "சித்திரம் பேசுதடி" படத்தில் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்... பாடல் மூலம் பிரபலமானவர்கள் 3 பேர். ஒருவர் மாளவிகா, இன்னொருவர் அந்தப்பாட்டை பாடிய கானா உலகநாதன், மற்றொருவர் கானா உலகநாதன் பாடும்போது அவருக்கு மைக் பிடித்து வருபவர். அவர் பெயர் முத்துராஜா.

அந்தபாட்டு மூலம் பிரபலமான முத்துராஜா தொடர்ந்து களவாணி உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடிகளில் கலக்கி வந்தார்.

சமீபத்தில் தான் அவருக்கு திருமணம் ஆனது. திருமணம் முடிந்து, மனைவியுடன் தேனி மாவட்டம், காமயக் கவுண்டம்பட்டியில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்துள்ளார்.

அப்போது தவறி விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதனையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் அவரது உடல்நிலை மோசமாகவே, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. மறைந்த முத்துராஜாவின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரில் நடக்கிறது.

மீண்டும் அஜித்-வெங்கட்பிரபு கூட்டணி

மங்காத்தா படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க போகிறார் வெங்கட்பிரபு. கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூலை குவித்த படங்களில் அஜித்தின் மங்காத்தா படமும் ஒன்று.

சென்னை-28, சரோஜா, கோவா படபுகழ் வெங்கட்பிரபு இயக்கிய இந்தபடத்தில், அஜித் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில், அதாவது வில்லனாக நடித்திருந்தார்.

இதனால் ரசிகர்களிடம் இந்தபடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அஜித்தே வெங்கட்பிரபுவிடம் நாம் இன்னொரு படம் பண்ணலாம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் வெங்கட்பிரபு, அஜித்தை சந்தித்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய வலைதளத்தில் வெங்கட்பிரபு கூறியிருப்பதாவது, ரொம்ப நாள் கழித்து நான், நம்ம தலையை சந்தித்தேன்.

மங்காத்தா படப்பிடிப்பு நாட்களில் நடந்த பல்வேறு சுவாரசியமான விஷயங்களை இருவரும் பேசி மகிழ்ந்தோம்.

மேலும் நாங்கள் இருவரும் சேர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இணைய முடிவெடுத்துள்ளோம்.

அது விரைவில் நடக்கும் என்று கூறியிருக்கிறார்.

சமந்தாவை காதல் தொல்லை செய்யும் சந்தானம்

நடிகை சமந்தாவுக்கு, காமெடி நடிகர் சந்தானம் காதல் தொ‌ல்லை கொடுத்து இம்சை பண்ணுகிறாராம்.

இது நிஜத்தில் அல்ல, சினிமாவில் தான். தெலுங்கில் மஹதீரா எனும் மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய ராஜ மெளலி, அடுத்து நான் ஈ என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழியிலும் இயக்கி வருகிறார். இதில் தெலுங்கு நடிகர் நானி, சமந்தா, சந்தானம் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

படம்குறித்து டைரக்டர் ராஜ மெளலி கூறுகையில், படத்தின் கதைப்படி ஹீரோயின் சமந்தா, ஏழ்மையான ஹீரோ நானியை லவ் பண்ணுகிறார்.

அதேப்போல் வில்லன் சுதீப்பும் சமந்தாவை லவ் பண்ண, சமந்தா அவரது காதலை ஏற்க மறுக்கிறார். இதனால் ஆத்திமுற்ற வில்லன் சுதீப், ஹீரோ நானியை கொன்று விடுகிறார்.

பின்னர் ஹீரோ நானி மறுபிறவியில் ஈ -ஆக பிறவியெடுத்து எதிரியை எப்படி அழிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறேன்.

இதில் விஷேசம் என்னவென்றால் தமிழ் சினிமாவில் ஈ-யை வைத்து படம் வருவது இதுதான் முதல்முறை.

அதுமட்டுமல்ல இந்தபடத்தில் சந்தானத்தை லவ் பண்ணும் கேரக்டரில் சமந்தா நடிக்கிறார்.

நானி கொல்லப்பட்டதும், மறுபிறவியில் சந்தானத்தை, ஹீரோ நானியாக நினைத்து லவ் பண்ணுகிறார் சமந்தா. அதேபோல் சந்தானமும், சமந்தாவை துரத்தி, துரத்தி லவ் பண்ணுகிறார்.

சந்தானம் இதுவரை நடித்த படங்களிலேயே, இந்தபடத்தில் தான் அவருக்கு டயலாக் ரொம்ப கம்மி, அதேசமயம் அவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் அமையும் என்றார்.

பிரபுதேவா நினைவாக குத்திய பச்சையை அழிக்கிறார் நயன்தாரா

பிரபுதேவாவை பிரிந்துவிட்ட நயன்தாரா, அவரின் நினைவுகளையும் முற்றிலுமாக அழிக்க நினைக்கிறார், இதனால் தனது கையில் பச்சையாக குத்தியுள்ள பிரபு என்ற பிரபுதேவாவின் பெயரை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அழிக்கவுள்ளார்.

பிரபுதேவாவின் மீதுள்ள தீவிர லவ்வால், அவருக்காக நடிப்புக்கு முழுக்கு போட்டு, மதம் எல்லாம் மாறினார்.

போதாகுறைக்கு பிரபுதேவாவின் பெயரையே கையில் பச்சை குத்திக்கொண்டார். அப்படியெல்லாம் பிரபுதேவா மீது லவ்வோ லவ்வாக இருந்த நயன்தாரா, இப்போது அவரை பிரிந்து விட்டார்.

பிரபுதேவாவை பிரிந்த நயன்தாரா மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார். தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் ஒரு படத்திலும், தமிழில் அஜீத்துடன் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் பிரபுதேவாவை முழுமையாக பிரிந்து விட்ட நயன்தாரா அவரது நினைவுகள் மற்றும் அடையாளங்களை கூட முழுவதுமாக அழித்து விட வேண்டும் என்று நினைக்கிறார்.

இதற்காக தனது கையில் பச்சையாக குத்திக் கொண்டுள்ள பிரபுதேவாவின் பெயரை அழிக்க எண்ணியுள்ளார். இதுதொடர்பாக மருத்துவர்களிடம் அவர் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

அவர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் இதனை நீக்கி விடலாம் என்றும், அதேசமயம் கையின் அழகும் கெடாது என்று கூற இப்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவெடுத்து இருக்கிறார் நயன்தாரா.

சினிமா விமர்சனம் - தோனி ( தோழன் நீ )

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதாவது... எனும் கதையில் இருக்கும் நம் நாட்டின் கல்விமுறையை களைய வேண்டும் எனும் கருத்தை "நண்பன்" படத்தில் காமெடியாக லைட்டாக எடுத்துரைத்திருந்தார் ஷங்கர்.

அதே கருத்தை தோனியில் சீரியஸாக, வெயிட்டாக சொல்லியிருக்கிறார் பிரகாஷ்ராஜ்! "தோனி" படம் அல்ல... பாடம் சொல்லி கொடுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும், தற்போதைய கல்வி முறைகளுக்கும் பாடம்! என்றால் மிகையல்ல!!

கதைப்படி வாங்கும் சம்பளம் வாய்க்கும், வயிற்றுக்கும் பத்தாமல் ஊறுகாய் வியாபாரம், ஊரைச்சுற்றிக்கடன் என்று வாழ்க்கையை ஓட்டும் ரிஜிஸ்தர் ஆபிஸ் கிளார்க் பிரகாஷ்ராஜ். மனைவியை இழந்து, இரண்டு குழந்தைகளுடன் நரக வேதனை நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும், பிள்ளைகளை பெரிய ஸ்கூலில் படிக்க வைத்து பெரிய ஆளாக்கும் கனவில் இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

அவரது கனவை நனவாக்கும் விதமாக பெண் பிள்ளை, ஸ்ரீஜிதா பொறுப்பாக படிக்கிறார். ஆனால் ஆண் பிள்ளை மாஸ்டர் ஆகாஷோ படிப்பில் ஜீரோ வாங்கிவிட்டு, கிரிக்கெட்டில் சிக்ஸராக அடிக்கிறார்.

இதனால் அவர் படிக்கும் ஹைஸ்டேண்டட் ஸ்கூலில் கண்டனக்குரல்கள் எழுந்து, அது பிரகாஷ்ராஜின் காதுகளை துளைக்கிறது. அதன் விளைவு... மகனை கண்டிக்கிறேன் பேர்வழி... என மாஸ்டர் ஆகாஷை அடிக்க, அது படாத இடத்தில் பட்டு ம‌கன் கோமா ஸ்டேஜூக்கு போகிறார்.

அப்புறம்? அப்புறமென்ன... சமூகத்தையும், இச்சமூகத்தில் தற்பொழுது தரப்படும் கல்விமுறையையும் சாடும் பிரகாஷ், சாகக்கிடக்கும் மகனை எவ்வாறு காப்பாற்றுகிறார், சமூகத்துடன் எப்படி போராடி ஜெயிக்கிறார்...? என்பது தான் வித்தியாசமும், விறுவிறுப்புமான "தோனி" படத்தின் முக்காலும், முழுசுமான மீதிக்கதை!

நாய்படாத பாடுபடும் நடுத்தர வர்க்கத்து குடும்பஸ்த்தனாக பிரகாஷ்ராஜ், வாங்கும் சம்பளம் போதாமல் வட்டிக்கு கடன் வாங்கி, பிள்ளைகளை பெரிய ஸ்கூலில் படிக்க வைத்து, அதை அடைக்க துணைக்கு மனைவியும் இல்லாமல், ஊறுகாய் தயாரித்து விற்று பிழைப்பு நடத்தி பெரும் போராட்டம் நடத்தும் பாத்திரத்தில் பிரமாதமாக பொருந்தி நடித்திருக்கிறார்.

படத்திற்கு தோனி நாட்-அவுட் என்று இந்திய கிரிக்கெட் கேப்டனின் பெயரை சூட்டிவிட்டு, கிரிக்கெட் மோகத்தில் மகனுக்கு படிப்பு ஏறவில்லையே என்ற வருத்தத்தில் மொட்டை மாடி கச்சேரியில் குடித்துவிட்டு நண்பர்களிடம் இந்த தோனி, தெண்டுல்கர் இவங்களையெல்லாம் தடை செய்து நாடு கடத்த வேண்டும்... என்று உணர்ச்சி பிழம்பாகி உளறும் இடத்தில் தொடங்கி, காய்கறிகாரனிடம் பெண்கள் மாதிரி பேரம் பேசுவது, ஊறுகாய் பாட்டில்களை ஆபிஸ் பீரோவில் பிறர் பார்வை படும்படி அடுக்கி வைத்து வியாபாரம் செய்ய முயல்வது, மகனின் படிப்பிற்காக ஆசிரியர்களிடம் கெஞ்சுவது, கிரிக்கெட் கோச் நாசரிடம் மகனை விட்டு விடும்படி மிஞ்சுவது, முறை தவறி வாழும் அப்பார்ட்மெண்ட் பெண்ணின் சூழ்நிலை புரியாமல் எக்கு தப்பாக பேசிவிட்டு, பின் அவரது மனிதாபிமானம் கண்டு மருகுவது, முதல்வரை பொது நிகழ்ச்சி ஒன்றில் தன் மகனுடன் முண்டியடித்து சந்திக்க முயல்வது... என நடுத்தர வர்க்கத்து பிரஜையாகவே வாழ்ந்திருக்கும் பிரகாஷ்ராஜூக்கு "தோனி" படத்தின் மூலம் தேசிய விருது உள்ளிட்ட இன்னும் பல உயரிய விருதுகள் கிடைக்கும் என்பது உத்திரவாதம்!

பிரகாஷ்ராஜூக்கு ஈடு கொடுத்து அவரது மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் ஆகாஷ், எனக்கு மேக்ஸ் வரலைப்பா, எனக்கு கிரிக்கெட் தான் வருது என்று தன் இயலாமையையும் கிரிக்கெட் சம்பந்தப்பட புள்ளி விவரங்களை சொல்லி தன் திறமையையும் வெளிப்படுத்தும் இடங்களில் பலே பலே... சொல்ல வைக்கிறார்.

இவர்களை மாதிரியே பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக ராதிகா ஆப்டே, எனக்கு வேற வழி தெரியலை... அதான் இந்த தொழிலுக்கு வந்துட்டேன்... என்று ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் பல இடங்களில் பிரகாஷ்ராஜையே மிஞ்சி விடுகிறார்.

ரிஜிஸ்தர் பிரம்மானந்தம், கிரிக்கெட் கோச் நாசர், கந்துவட்டிக்காரராக வரும் புதுமுகம், பிரகாஷ்ராஜின் பொறுப்பான மகளாக வரும் ஸ்ரீஜிதா உள்ளிட்ட ஒவ்வொருவரும் "தோனி" படத்தின் ஒவ்வொரு பலமான பேட்ஸ்மேன்கள் என்றால் மிகையல்ல!

இளையராஜாவின் பாடல்கள் இசையும், பின்னணி இசையும் கதையையும், களத்தையும் ஏதோ நமது பக்கத்து வீட்டில் நடப்பது மாதிரி பரிச்சயப்படுத்தி பலம் சேர்த்திருக்கிறது. கே.வி.குகனின் ஒளிப்பதிவும் இதே எண்ணத்தை படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் ஏற்படுவதற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

பிரகாஷ்ராஜின் மகன் மாஸ்டர் ஆகாஷ், தோனியை ரோல் மாடலாக கொண்டு அவர் மாதிரி வரவேண்டும் என்று கிரிக்கெட் விளையாடுகிறான். ஆனால் ரோல் மாடல் வலது கை பேட்ஸ்மேன் என்றால், இவர் இடதுகை பேட்ஸ்மேனாக ஸ்கிரீனில் வருவது நெருடுகிறது! மற்றபடி ஷங்கரின் "நண்பன்" மாதிரி இல்லாமல், நம் நாட்டின் கல்வி முறையை மாற்ற வேண்டும் என "நச்" ‌என்ற மாதிரி "டச்" பண்ணி, தமிழில் படம் இயக்கி இருக்கும் பிரகாஷ்ராஜூக்கு ரசிகன் ரசிகை பாகுபாடு இல்லாமல் இச்... இச்... தரலாம்!

மொத்தத்தில் "தோனி" மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களை பெற்றவர்களுக்கும், பாடம் சொல்லி தரும் ஆசிரியர்களுக்கும் நல்ல "தோழன்(நீ!)"

மீண்டும் மருதநாயகம் படப்பிடிப்பா?

நடிகர் கமலஹாசன் 1997-ல் மருதநாயகம் என்ற படத்தை தொடங்கினார். இங்கிலாந்து ராணி எலிசபெத் இதன் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. பின்னர் நிதி நெருக்கடி காரணமாக பட வேலைகள் நிறுத்தப்பட்டன. இப்படம் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த போர் வீரன் யூசுப்கானை பற்றிய கதை.


பிரமாண்ட சரித்திர அரங்குகள், போர் வீரர்கள் உடைகள் என இதற்கு ரூ. 150 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டதால் படத்தை கைவிட்டார்.

தற்போது மீண்டும் “மருத நாயகம்” படப்பிடிப்பை துவங்கப் போவதாகவும் இதில் ரஜினியும் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் கமல் மும்பையில் நேற்று பேட்டி அளித்ததாக செய்திகள் வெளியாயின.


இது தவறான செய்தி என்றும் கமல் அவ்வாறு பேட்டி அளிக்கவில்லை என்றும் மறுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கமல் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


“மருதநாயகம்” படப்பிடிப்பை துவங்கப் போவதாகவும் ரஜினியும் அதில் நடிப்பார் என்றும் கமல் மும்பையில் பேட்டியளித்ததாக வெளியான செய்தி உண்மையல்ல 15 வருடத்துக்கு முன் கமலும் ரஜினியும் நட்சத்திர கலை விழாவுக்காக சிங்கப்பூர் சென்ற போது கமல் அளித்த பேட்டியை எடுத்து இப்போது அவர் சொன்னதாக இணைய தளம் ஒன்று வெளியிட்டு உள்ளது.


கமல் தற்போது விஸ்வரூபம் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இப்படம் முடிந்ததும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் “தலைவன் இருக்கின்றான்” என்ற படத்தில் நடிக்க உள்ளார்.


இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

செல்லம் திருடிய வெல்லம்

செல்லம் நடிகர் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் ஆறு, ஏரி, கடல்களில் பயணிக்க பயன்படும் ஒருவகை படகின் பெயர் கொண்ட படத்தின் கதை மகேஷ் மஞ்ச்ரேக்கர் எனும் மராத்தி இயக்குநர் இயக்கிய ஒரு மராத்திப் படத்தின் ராயல்டி தராத காப்பி.,

அதாஙங்க, அப்பட்டமான காப்பி என்ற தகவல் கோலிவுட்டில் லேட்டஸ்ட்டாக பரவி வருகிறது!

ஏற்கனவே இந்தப்படம் செல்லம் தயாரிப்பில் இயக்குநராக புகழ் பெற்ற ராதாமோகன் டைரக்ஷன் ஸ்டைலில் இருக்கிறது என ஒரு கருத்து நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.

இதை பற்றி எல்லாம் கேட்டால் பதில் என்னவோ அதெல்லாம் "இல்ல செல்லம்" என்பதாகத்தானே இருக்கும்..?!

ரஜினி மருமகனான பின்னர் என் சுய அடையாளத்தை இழந்தேன் - தனுஷ்

ரஜினி மகளான ஐஸ்வர்யாவை மணந்த பின்னர் தன்னுடைய சுய அடையாளத்தையே இழந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் தனுஷ். தனுஷின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலவெறி பாடலால் எங்கயோ போய்விட்ட தனுஷ், சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது விழாவில் பேசிய தனுஷ், கொலவெறி பாடலை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு சமர்பிப்பதாக தெரிவித்தார்.

பின்னர் நிகழ்ச்சி முடித்து வெளியே வந்த தனு‌ஷிடம் ஏன்? இந்த பாடலை ரஜினிகாந்துக்கு சமர்பிக்கவில்லை என்று கேட்டனர் அதற்கு தனுஷ், குடும்பத்தில் இருக்கிறவர்களிடமே இந்தபாட்டை சமர்பிக்க கூடாது.

அது நன்றாக இருக்காது, என் மாமனார் மீது எனக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கிறது என்றார். மேலும் 2004-ம் ஆண்டு ஐஸ்வர்யாவை திருமணம் செய்த பின்னர், யாரும் என்னை ஒரு நடிகராகவோ அல்லது தனுஷ் என்றோ பார்ப்பதில்லை.

ரஜினியின் மருமகனாகத்தான் பார்க்கின்றனர். அதற்கு முன்பு வரை எனக்கு இருந்த பெயர், புகழ் எல்லாம் ரஜினியின் மருமகன் ‌என்ற பட்டம் அடித்து சென்றுவிட்டது. இதனால் நான் என்னுடைய சுய அடையாளத்தையே இழந்துவிட்டேன்.

எந்த நிகழ்ச்சியில் பங்‌கேற்றாலோ அல்லது பத்திரிக்கையாளர்களை சந்தித்தாலோ அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, ரஜினியின் மருமகன் என்பதை எப்படி உணர்கிறீர்கள். திருமணம் ஆன பிறகு என்னிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி இது தான்.

இப்போது அந்த கேள்வி படிப்படியாக குறைந்து இருக்கிறது. ஆனாலும் ஆரம்பத்தில் முதல் கேள்வியாய் கேட்டவர்கள் இப்போது இடையில் கேட்கின்றனர்.

இனி வருங்காலத்திலும் அதுவும் இருக்காது என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தனுஷ் இவ்வாறு கூறியிருப்பது ரஜினி குடும்பத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மீண்டும் நயன்தாராவுக்கு தூது விடும் சிம்பு

ஏற்கனவே ஒஸ்தி படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்த சிம்பு, இப்போது நயன்தாரா மீண்டும் நடிக்க வந்ததையடுத்து, தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வைக்க இயக்குநர் ஒருவர் மூலம் முயற்சி செய்து வருகிறாராம்.

பிரபுதேவாவை காதலிப்பதற்கு முன்னர் சிம்புவை காதலித்தவர் நடிகை நயன்தாரா. சிம்புவுடனான காதலும் முறிந்து, இப்போது பிரபுதேவாவுடனான காதலும் முறிந்து தவித்து வரும் நயன்தாரா, மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

முதற்கட்டமாக தெலுங்கில் ஒருபடத்திலும் தமிழில் அஜித் ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் நயன்தாராவுக்கு தூது விட்டு இருக்கிறாராம் சிம்பு. அதாவது தன்னுடைய அடுத்த படத்தில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

இதற்காக இயக்குநர் ஒருவரும் நயன்தாராவிடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் ரீ-என்ட்ரி ஆகியிருக்கும் நயன்தாராவை, சிம்புவுடன் ஜோடி சேர்த்து படம் இயக்கினால், படம் ஹிட்டாவதோடு, நல்ல வசூலும் பெறும் என்பது அந்த இயக்குநரின் நம்பிக்கை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்...!

ரேஸ்-2 படத்தில் இருந்து தீபிகா படுகோனே விலகியது ஏன்...?

இந்தி படமான ரேஸ்-2 படத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார் நடிகை தீபிகா படுகோனே. இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தீபிகா படுகோனே.

இவர் சவுந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடிக்க இருக்கும் கோச்சடையான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் ரஜினி படத்தில் நடிப்பதற்காக ரேஸ்-2 படத்தில் இருந்து தீபிகா விலகிவிட்டதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் தாரணி பாலிவுட் சினிமா கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தீபிகா மீது புகார் கொடுத்துள்ளார்.

அதில் நான் டிப்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரேஸ் 2 இந்திப் படத்தை தயாரித்து வருகிறேன். இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அவர் ஒரு வாரம் படப்படிப்பில் பங்கேற்று நடித்துக் கொடுத்தார். இப்போது திடீர் என்று ரேஸ் 2 படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக கூறுகிறார்.

இதனால் ரேஸ் 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற முடியாமல் தடைபட்டு எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார் தீபிகா படுகோனே. இதுகுறித்து அவர் கூறியதாவது, கோச்சடையான் படத்திற்காக ரேஸ்-2 படத்திலிருந்து விலகவில்லை.

ரொம்ப நாளைக்கு முன்பே இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது. ரேஸ்-2 படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்து விட்டு, படப்பிடிப்பு நடத்தாமல் ஒரு வருடத்திற்கு மேலாக இழுத்தடித்து கொண்டு உள்ளனர். இதனால் என்னுடைய கால்ஷீட் வேஸ்டானது.

எனவே அந்த படத்தில் இருந்து விலகினேன். இதுகுறித்து நடிகர் சங்கம் என்னிடம் விளக்கம் கேட்டுள்ளது. நான் பதிலளிக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.

தமிழ்சினிமாவை விட்டு தமன்னா விலகியது ஏன்?

தமிழ் சினிமாவை விட்டு விலகியது ஏன் என்ற கேள்விக்கு நடிகை தமன்னா பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக, ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை தமன்னா.

ஏனோ சில காரணங்களால் தமிழ் சினிமாவில் நடிக்காமல் விலகியிருக்கிறார். இந்த விலகலுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தமன்னா வாயில் இருந்து எந்தவொரு காரணமும் சொல்லப்படவில்லை.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருப்பதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார்.

அதில், எனக்கு படங்களின் எண்ணிக்கை முக்கியமில்லை. தரமான படங்களாக இருக்க வேண்டும்.

எந்த மொழியாக இருந்தால் என்ன...? சில நடிகைகள் ஒரே நேரத்தில் ஏழெட்டு படங்களில் நடிக்கின்றனர். அதில் எனக்கு உடன்பாடில்லை.

அந்த நடிகைகளை போல் நான் இருக்கமாட்டேன். நிறைய படங்களில் ஒரே நேரத்தில் நடிப்பது பயன் தராது என கருதுகிறேன்.

தமிழ் படங்களை நான் ஒதுக்கவில்லை. நல்ல கதை, நம்பிக்கையான இயக்குனர்களுக்காக காத்திருக்கிறேன், என்றார்.

சகுனி தாமதத்திற்கு தயாரிப்பாளரே காரணம்

பருத்தி கார்த்தி நடித்து இதோ ரிலீஸ்...அதோ ரிலீஸ் என பூச்சாண்டி காட்டிவரும் சகுனி படம்., யாரோ, கூனி சதி செய்த மாதிரி ரிலீஸ் தேதி தள்ளி தள்ளிப் போகக் காரணம் அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாதானாம்!

அடிக்கடி படத்தை போட்டு போட்டு பார்க்கும் ஞானவேல் ராஜா., இதை மாற்று..அதை மாற்று என இயக்குநர் சங்கர்தயாளுக்கு எக்கச்சக்க மாற்றங்களை செய்ய சொல்லி கடுப்பேற்றி வருகிறாராம்!

இதனால் புரடியூசருக்கும் டைரக்கடருக்கும் இடையே பரஸ்பர நல்லுறவு புட்டுகிச்சு என்கின்றனர் படக்குழுவினர்!!நிஜம் என்ன..?

டூப் இல்லாமல் ரியலாக நடித்த அஜித்

அஜித், பார்வதி ஒமணக்குட்டன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் பில்லா 2. சக்ரி இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் பாடல் வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

பில்லா 2 படத்தினை எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார்களாம். ஒவ்வொரு காட்சிக்கும் பல கோடிகளை செலவு செய்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

அஜித் மற்றும் வில்லன்கள் மோதும் காட்சியை ஜார்ஜியாவில் உள்ள பனிமலையில் படமாக்கி இருக்கிறார் சக்ரி.

இது வரை இந்திய சினிமாவில் அப்படி ஒரு சண்டைக்காட்சியை பார்த்து இருக்க முடியாது என்கிறது படக்குழு.

அதுபோலவே ஆங்கில படங்களில் வரும் ஹெலிகாப்டர் சண்டைக்காட்சியை போன்று பில்லா 2 படத்திலும் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது.

அந்த சண்டைக்காட்சிக்கு பல கோடிகளை செலவு செய்து இருக்கிறார்கள். ஹெலிகாப்டர் சண்டைக்காட்சிகளில் ரிஸ்க் இருந்தும் டூப் எல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டு தானே நடித்து கொடுத்து இருக்கிறார்

நான் தான் அடுத்த எம்.ஜி.ஆர்., கோச்சடையான் தான் எனக்கு போட்டி - பவர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒருவர் எப்படியாவது பிரபலமாகி விடுவர். அந்த வகையில் எடுப்பான பல்லும், துடிப்பான முகமும், தடிப்பான உருவமும், கருப்பு கண்ணாடியில், வெள்ளை உடையில் அவர் தலையை கோதி விடும் ஸ்டைலும், கமல் முதல் கவர்னர் சந்திப்பு வரை, பவர் ஸ்டார் என்ற பட்டதோடு உலா வரும் டாக்டர்.சீனிவாசனின் சிறப்பு பேட்டி உங்களுக்காக. இதோ அவரே பேசுகிறார் கேளுங்கள்...

மதுரையில் சிம்மக்கல்லில் 10 வருடங்களாக அக்குபஞ்சர் மருத்துவம் பார்த்து வந்த என்னை நோயாளியாக வந்த ஒருவர், நீங்கள் சினிமாவில் நடித்தால் சூப்பரா இருக்கும் என்று உசுபேத்தி விட நானும் கிளம்பி கோடம்பாக்கம் வந்தேன்.

வந்த சில நாட்களிலேயே லத்திகா என்ற கதையை ரெடி பண்ணி, நானே இயக்கி நடித்தேன். படமும் சூப்பரா 225 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அடுத்து கொஞ்ச இடைவெளியில் ஆனந்த தொல்லை படம் வெளியாக உள்ளது. இந்தபடத்தில் வில்லனாக நடிக்கிறேன். எனக்கு ஜோடியா வாணி விஸ்வநாத் நடிக்கிறாங்க.

என்னை பொறுத்த வரை ஏனோ தானோ என்று படம் பண்ண விருப்பம் இல்லை. நல்ல கதை தான் ரொம்ப முக்கியம். இந்த படத்தை அடுத்து தேசிய நெடுஞ்சாலை என்ற படத்தில் நடிக்கிறேன். இதில் சங்கவி தான் என் ஜோடி. படத்தை நானே இயக்கி நடிக்கிறேன். இதற்கு அடுத்து படைத்தலைவன்.

இந்தபடம் ஒரு போலீஸ் ஸ்டோரி. மாரி மைந்தன் இப்படத்தை இயகுகிறார். கே.எஸ்.ரவிக்குமார் சார் படத்தில் நடிக்க ஆசை உள்ளது. அதை விட ரொம்ப முக்கியம் சங்கவி மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் கிடைத்தால் மன்மத ராசா பாட்டு மாதிரி, என்னாலையும் ஆட முடியும். இதற்காக இப்போ பரதம் உள்ளிட்ட நடனம் எல்லாம் கத்துக்குகிட இருக்கேன்.

சினிமா மட்டும் இல்ல, சொந்தமா பிசினஸ் இருக்கு, கிளினிக்கு இருக்கு, அதை தவிர எனக்கு கல்லூரி மாணவர்கள் ரசிகர்கள் அதிகம். அவங்க கல்சூரல் விழாக்களுக்கு நான் கலந்துகிட சொல்லி வர்புறுத்துராங்க. நானும் போய் ‌ஜாலியா இருந்துட்டு வரேன். தமிழ் சினிமாவில் நல்ல கதை உள்ள படங்கள் பண்ணி மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்க விரும்புகிறேன்.

எனக்கு பெண் ரசிகர்கள் ரொம்ப இருக்காங்க. பவர் ஸ்டார் படத்தில் நல்ல கதை இருக்கும் என்று நிறைய பேர் படம் பார்க்க வர்றாங்க. அப்ப நீங்க தான் அடுத்த எம்.ஜி.ஆரா என்று கேட்காதீங்க. நான் அப்படி சொல்ல வரவில்லை.

அவருக்கு அடுத்து நான் தான் வருவேன். இன்னும் ரசிகைகள் மனதில் இடம் பிடிப்பேன். அப்படின்னா உங்களுக்கு அரசியல் ஆசை இருக்குமோன்னு தோணும், சொன்ன நம்பமாட்டீங்க, எனக்கு ரசிகர் மன்றம் வைக்க கேட்டு ரசிகர்கள் ‌தொல்லை பண்றாங்க. ஆனால் நான் தான் இப்போதைக்கு மன்றம் எல்லாம் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். என்னால் முடிஞ்ச வரைக்கும் நல்லது பண்ணிகிட்டு இருக்கேன்.

இந்த சினிமாவிற்குள் நான் வந்தது ரொம்ப பெரிய விஷயம். பொது இடங்களில் என்னை பார்த்தால் உடனே பவர் ஸ்டார்ன்னு எல்லோரும் ஓடி வராங்க. லத்திகா படத்தில் நடிச்ச காட்சியை சொல்லி நடிச்சு காட்ட சொல்றாங்க. அந்தளவிற்கு மக்கள்கிட்ட நான் ரீச் ஆகியிருக்கேன்.

எனக்கு கூட ஒரு சமயம் பாரதிராஜா சார் படத்தில் நடிக்க வேண்டும் என்று தோணுச்சு, அப்புறம்தான் அவர்கிட்ட போய் வாய்ப்பு கேட்டு நிக்குறது பதிலா நாமலே படம் டைரக்ட் செய்யலாம் என்று முடிவு பண்ணி, படம் இயக்க தொடங்கினேன். இப்பகூட தினமும் பத்து கதைகள் கேட்கிறேன், ஆனால் எனக்கு செட் ஆனா மட்டும் தான் அந்த கதையில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன்.

இப்போதைக்கு என் படங்கள் எல்லாம் நல்லா வந்துட்டு இருக்கு. பவர்ஸ்டாரின் படத்துக்கு ஒரே போட்டி படம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் படம் தான். சென்னையில் மட்டும் எனக்கு 5லட்சம் ரசிகர்கள் இருக்காங்க. இதுமாதிரி பல ஊர்களிலும் எனக்கு ரசிகர்கள் இருக்காங்க. என்னுடைய பலமே என் ரசிகர்கள் தான்.

தொடர்ந்து நல்ல கதையம்சம், நல்ல கருத்துள்ள படங்களை பண்ணுவேன் என்று சொல்லி முடித்த பவர்ஸ்டார் சீனிவாசன், சமீபத்தில் கமல்ஹாசனுடன் எடுத்துக்கொண்ட போட்டோவையும், கவர்னருடனும் எடுத்து கொண்ட போட்டோவையும் என்னால் மறக்க முடியாது என்று சொல்லி முடித்தார்.

ஆக தமிழ் சினிமாவில் இனி பவர் ஸ்டாரின் படங்கள் எல்லாம் லத்திகா மாதிரி 200, 300 நாட்கள் ஓட வாய்பிருக்கு என்று சொல்லி வைப்போம்.

அரசியலுக்கு வர எனக்கு எந்த தகுதியும் கிடையாது - அஜித் அதிரடி

எனக்கு சினிமா மட்டும் தான் தெரியும், அரசியல் தெரியாது. அரசியலுக்கு வர எனக்கு எந்த தகுதியும் கிடையாது நடிகர் அஜித் அதிரடியாக கூறியிருக்கிறார்.

தற்போது பில்லா-2 படத்தில் பிஸியாக இருக்கும் அஜித், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டுல ஏற்கனவே நிறைய அரசியல்வாதிங்க இருக்காங்க.

இதுல அரசியலே என்னவென்று தெரியாத நிலையில், அரசியல பத்தி முழுசா புரிஞ்சுக்காம, வெறும் சினிமா பாப்புலாரிட்டியை மட்டும் வைத்து நான் எப்படி அரசியலில் இறங்குவது.

நிச்சயம் நான் அப்படி செய்ய மாட்டேன். எனக்கு தெரிஞ்சதெல்லாம் சினிமா மட்டும் தான். தெரிஞ்ச சினிமாவை விட்டு தெரியாத அரசியலில் இறங்கி, மக்களையும் குழப்ப மாட்டேன்.

அரசியலுக்கு வரும் எந்த தகுதியும் எனக்கு சுத்தமா கிடையாது என்று கூறியுள்ளார்.

முதலில் சிம்பு! இப்போ பிரபுதேவா!! நயன்தாரா உறவினர்கள் புலம்பல்

முதலில் சிம்புவை நம்பி ஏமாந்த நயன்தாரா, இப்போது பிரபுதேவாவையும் நம்பி ஏமாந்துவிட்டாள் என்று நயன்தாராவின் உறவினர்கள் புலம்பி வருகின்றனர். சிம்பு உடனான காதல் முறிவுக்கு பின்னர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா.

நயன்தாராவுக்காக முதல் முனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. அதேபோல் பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு எல்லாம் மாறினார் நயன்தாரா.

அதைவிட கல்யாணம் பண்ணா‌மலேயே இருவரும் சிறந்த தம்பதிகள் பட்டம் எல்லாம் வாங்கினர். அப்படி ஈருடல் ஓருயிராக இருந்த வந்த இருவரும், இப்போது பிரிந்து விட்டனர். நயன்தாரா மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் நயன்தாராவின் இந்த நிலைமையை பார்த்து அவரது சித்தி, சித்தப்பா ஆகியோர் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, நயன்தாராவின் நிலைமையை பார்க்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

நாங்கள் தூக்கி வளர்த்த பெண் நய‌ன்தாரா. இன்று அவளுக்கு இப்படி ஒரு நிலைமையாகும் என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. நயன்தாரா பிடிவாதக்காரி என்று எல்லோரும் சொல்கின்றனர். அவள் பிடிவாதக்காரியல்ல, ரொம்ப வெகுளி பெண்.

சிம்புவிற்காக வல்லவன் படத்திற்கு நயன்தாரா பண உதவி எல்லாம் செய்தாள். கடைசியில் சிம்புவை நம்பி ஏமாந்து போனாள். அடுத்து பிரபுதேவாவை நம்பி போனாள். இனியாவது அவள் வாழ்வில் சந்தோஷம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம்.

பிரபுதேவாவை ரொம்ப நம்பினாள் நயன்தாரா. கடைசியில் பிரபுதேவாவிடமும் ஏமாந்து போனாள். ரமலத்-பிரபுதேவா விவாகரத்து உள்பட பல விஷயங்களுக்கு பிரபுதேவாவுக்கு பண உதவி செய்தவர் நயன்தாரா தான். அவர்களுக்கு பணம்தான் முக்கியமாக இருந்ததே தவிர நயன்தாராவின் பாசம் அல்ல.

நயன்தாரா இனி மேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதுதான் அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்து இருக்கும். கடைசியில் அவளிடமிருந்‌த எல்லா பணத்தையும் சுரண்டி விட்டு, இப்போது அவளையும் கழற்றி விட்டு விட்டார்கள். சினிமாவை மட்டும் நயன்தாரா விட்டுவிட்டு வந்தால் நாங்களே அவளுக்கு நல்ல பையனாக பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் வருத்தத்துடன் கூறியுள்ளனர்.

கோச்சடையானில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினி நடிக்க இருக்கும் கோச்சடையான் படத்தில் அவருக்கு ஜோடியாக, ஏற்கனவே ராணா படத்தில் நடிக்க ஒப்பந்தமான தீபிகா படுகோனேயே நடிக்க இருப்பதாக அ‌திகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈராஸ் இன்டர்நேஷனல் மற்றும் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயிண்மென்ட் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து பிரம்மாண்ட பொருட்ச் செலவில் தயாரிக்கும் படம் கோச்சடையான்.

இப்படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்க, திரைக்கதை அமைத்து சவுந்தர்யாவுக்கு உதவுகிறார் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

சமீபத்தில் தான் இப்படத்தின் பூஜை தொடங்கியது. ஆனால் ரஜினிக்கு ஜோடியாக யார் என்பது மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

அவருக்கு ஜோடியாக பாலிவுட் குயின் கத்ரீனா கைப்பை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது.

இந்நிலையில் ஏற்கனவே ராணாவில் நடிக்க ஒப்பந்தமான தீபிகா படுகோனேயை இப்படத்திலும் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இப்படத்தின் இயக்குநரும், ரஜினி மகளுமான சௌந்தர்யா அஸ்வினே தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கோச்சடையானில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், சினேகா உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திர பட்டாளங்களும் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், ஆர்யா, நயன்தாரா கூட்டணியில் விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படம்

அஜித்தை வைத்து விஷ்ணுவர்தன் இயக்க இருக்கும் புதிய படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவும், கூடவே இன்னொரு முக்கிய ரோலில் ஆர்யா நடிக்க போவதாகவும் தகவல்‌கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜித் நடித்த பில்லா படம் மாபெரும் ஹிட்டானது. தொடர்ந்து அஜித்தை வைத்து பில்லா-2 படத்தையும் விஷ்ணுவர்தன் தான் இயக்குவதாக இருந்தது.

ஆனால் இடையில் தெலுங்கு பட பிஸியால், விஷ்ணுவர்தன் அந்த படத்தை இயக்க முடியாமல் போனது. இதனையடுத்து அந்த பொறுப்பை உன்னைப்போல் ஒருவன் சக்ரி டோல்டி ஏற்றார். தற்போது இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் பில்லா-2க்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார் என்றும், இதை ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்ட பொருட்ச் செலவில் தயாரிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. கூடவே படத்தில் இன்னொரு முக்கிய ரோலில் ஆர்யாவும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காதலுக்காக சினிமாவைவிட்டு போன நயன்தாரா, காதல் கசந்ததால் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

விஷ்ணுவர்தன் சொன்ன கதை ரொம்பவே பிடித்து போனதால் இந்தபடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாவுகம், படத்தில் அம்மணிக்கு பேசப்பட்ட சம்பளம் ரூ.1.5கோடி என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தெலுங்கிலும் ஒரு படத்தில் நயன்தாரா நடிக்க சம்மதித்துள்ளார் என்பதும், அந்த படத்திற்கும் இதே சம்பளம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஏ.சந்திரசேகரன் பதவி விலக வேண்டும் - தயாரிப்பாளர்கள் போர்க்கொடி

புதிய சினிமா தொழிலாளர்கள் சங்கத்தை, உடனடியாக துவங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத, எஸ்.ஏ.சந்திரசேகரன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று, அதிருப்தி தயாரிப்பாளர்களின் அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு, சிக்கல் ஆரம்பமாகியுள்ளது.

சினிமா தொழிலாளர்கள் சம்பளப் பிரச்னை தொடர்பாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் (பெப்சி) இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை, இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இப்பிரச்னை தீர்க்கப்படாததால், கடந்த 12 நாட்களாக, தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பிரச்னைக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம், இன்னும் தீர்வு காணப்படாததால், சங்க நிர்வாகத்தின் மீது, தயாரிப்பாளர்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது.

அதிருப்தி தயாரிப்பாளர்களின் திடீர் கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில், திரைப்படத் தயாரிப்பாளர்கள் முக்தா சீனிவாசன், கே.ராஜகோபால், கேயார், ஜெயசித்ரா உட்பட, 100க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்னை குறித்து, கடந்த மாதம் நடத்தப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டத்தில், விரிவாக விவாதித்து
எடுக்கப்பட்ட முடிவை, சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இன்னும் நிறைவேற்றாதது வருத்தத்துக்குரியது, கண்டனத்திற்குரியது.

சினிமா படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவதற்கு ஏதுவாக, "புதிய சினிமா தொழிலாளர்கள் அமைப்பு உடனடியாக உருவாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள சினிமா இயக்குனர் அமீர், புதிய படத்தில் ஒப்பந்தம் இல்லா இயக்குனருக்கு, சம்பளமாக 10 லட்சம் ரூபாயும், இணை இயக்குனருக்கு 4 லட்சம் ரூபாயும், உதவி இயக்குனருக்கு 2 லட்சம் ரூபாயும், இயக்குனருக்கு தினப்படி 1,000 ரூபாயும், தயாரிப்பாளர் கொடுக்க வேண்டும் என்றும், படத்தின் தலைப்பை இயக்குனர் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், பட வெளியீட்டிற்கு இயக்குனர் சங்கத்தின் தடையில்லா சான்று வாங்க வேண்டும் என்றும், தன்னிச்சையாக அறிவித்திருப்பது, தயாரிப்பாளர்களின் சுய மரியாதைக்கு விடப்பட்ட சவாலாக தெரிகிறது. அமீரின் செயல் கண்டனத்திற்குரியது.

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகரன்,தேர்தல் நேரத்தில் அறிவித்த எந்த வாக்குறுதியையும் இன்று வரை நிறைவேற்றாததால், சங்கத்தில் உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்களுக்கு, அவர் மீது நம்பிக்கை இல்லை.

சங்கச் செயல்பாட்டில் தனது இயலாமைக்கு, தார்மீக பொறுப்பேற்று, உடனடியாக பதவி விலகவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனால், சினிமா தயாரிப்பாளர்கள் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளதால், சங்க நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.அமீரின் தன்னிச்சையான அறிவிப்பு குறித்து முடிவு எடுப்பதற்கு, தமிழ்நாடு சினிமா இயக்குனர் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று நடக்க உள்ளது. சினிமா தொழிலாளர்கள் சம்பளப் பிரச்னை தொடர்பாக, நாளை "பெப்சி அமைப்பினர் உண்ணாவிரதம் நடக்கிறது.

தகடுதகடு நடிகரின் சம்பள உணர்வு

தமிழ் உணர்வு ரீதியான படங்களில் நடிப்பதற்கு ஒரு போதும் சம்பளம் வாங்கியதில்லை..... என பேட்டிகளில் எல்லாம் பில்ட் அப் கொடுக்கும் அந்த தகடுதகடு நடிகர்., "வெங்காயம்" படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஈ.வெ.ரா., கொள்கைகளை பறைசாற்றும் பகுத்தறிவுவாதி வேடத்தில் ஆடப்பாடியிருந்தார்!

இதற்கு சம்பளமே வாங்கவில்லை தகடுதகடு என ஒரு பக்கம் பப்ளிசிட்டியை கிளப்பிவிட்டு விட்டு., நடிகர் சப்தமில்லாமல் வாங்கிய சம்பளம்., இந்த ஒரே ஒரு பாடலில் தோன்றி நடிக்க நான்கு லட்சங்கள் என்கிறது விவரமறிந்த வட்டாரம்!

அதே மாதிரி, தான் ஹீரோவாக நடித்த படங்கள் வெளிவர எந்தவித உதவியும் செய்யாத ஒரே ஹீரோ தமிழ் சினிமாவில் தகடுதகடு ஹீரோவாகத்தான் இருக்க முடியும் என்கிறது அதே விவரமறிந்த வட்டாரங்கள்!

இவரது உதவி எந்தவிதத்திலும் இல்லாததால் தான் "வெங்காயம்", "உச்சிதனை முகர்ந்தால்" உள்ளிட்ட பகுத்தறிவு தமிழுணர்வு படங்கள் ரிலீஸ், ரீரிலீஸ் என்று பல்வேறு போராட்டங்களை சந்திப்பதாகவும் சொல்கிறார்கள். பாவம்!

இதுவே ஹீரோ உதவிக்கரம் நீட்டியிருந்தார் என்றால் ஒரே ரிலீஸில் மேற்படி படங்கள் செமகல்லா கட்டியிருக்கலாம் என்றும் தகவல்கள் கசிகின்றன!

பகுத்தறிவும், தமிழ் உணர்வும் சம்பள உணர்விற்கும் உணவுக்கும் அப்புறம் தான் போலும் தகடு தகடு நடிகருக்கு?

பிரபுதேவா.. நயன்தாரா..ஹன்சிகா: முக்கோணம்?

காதலுக்காக பிரபுதேவா தன் மனைவியை விவாகரத்துச் செய்தார், பதிலுக்கு நயன்தாரா ( டயானா) மதம் மாறினார். இப்படி பரஸ்பரம் பல்வேறு தியாகங்களை செய்து உன்னத காதல் ஜோடி போல உலா வந்த இந்த ஜோடியின் உறவு பனால் ஆனது பலருக்கும் ஏன் என கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்நிலையில் பிரபுதேவாவின் எங்கேயும் காதல் படத்தில் நடித்த ஹன்சிகா மோத்வானியின் என்டரி தான் நயன் - பிரபு காதலுக்கு ஃபுல்ஸ்டாப் வைத்துள்ளது என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

சினிமாவில் வரும் முக்கோணக் காதல் மாதிரி இந்த சினிமா ஸ்டார்கள் மத்தியில் முக்கோணக் காதலா என்றால் அதற்கு தெளிவான விடை இல்லை!

ஆனால் இந்த தகவல்கள் பற்றி ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில் : பிரபுதேவா என் அண்ணன் மாதிரி, அவரை நான் அன்பாக பிரபு அண்ணா என்று தான் அழைப்பேன்.

என் மனநிலையையும் புரிந்து கொள்ளுங்கள் அநாவசியமாக புரளியை கிளப்பி விடாதீர்கள். இப்போதைக்கு எனது லட்சியம் எல்லாம் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பது மட்டும் தான் என்கிறார்.

எது உண்மை என்பது இந்த மூன்று பேருக்கு மட்டும் தான் வெளிச்சம்!! இந்நிலையில் பிரபுதேவா விரைவில் ஒரு லவ் சாங் ஆல்பம் வெளியிட இருக்கிறார்.

இதை யாருக்கு டெடிகேட் பண்ணுவார்?
Related Posts Plugin for WordPress, Blogger...