நடிகை சமந்தாவுக்கு, காமெடி நடிகர் சந்தானம் காதல் தொல்லை கொடுத்து இம்சை பண்ணுகிறாராம்.
இது நிஜத்தில் அல்ல, சினிமாவில் தான். தெலுங்கில் மஹதீரா எனும் மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய ராஜ மெளலி, அடுத்து நான் ஈ என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழியிலும் இயக்கி வருகிறார். இதில் தெலுங்கு நடிகர் நானி, சமந்தா, சந்தானம் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
படம்குறித்து டைரக்டர் ராஜ மெளலி கூறுகையில், படத்தின் கதைப்படி ஹீரோயின் சமந்தா, ஏழ்மையான ஹீரோ நானியை லவ் பண்ணுகிறார்.
அதேப்போல் வில்லன் சுதீப்பும் சமந்தாவை லவ் பண்ண, சமந்தா அவரது காதலை ஏற்க மறுக்கிறார். இதனால் ஆத்திமுற்ற வில்லன் சுதீப், ஹீரோ நானியை கொன்று விடுகிறார்.
பின்னர் ஹீரோ நானி மறுபிறவியில் ஈ -ஆக பிறவியெடுத்து எதிரியை எப்படி அழிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறேன்.
இதில் விஷேசம் என்னவென்றால் தமிழ் சினிமாவில் ஈ-யை வைத்து படம் வருவது இதுதான் முதல்முறை.
அதுமட்டுமல்ல இந்தபடத்தில் சந்தானத்தை லவ் பண்ணும் கேரக்டரில் சமந்தா நடிக்கிறார்.
நானி கொல்லப்பட்டதும், மறுபிறவியில் சந்தானத்தை, ஹீரோ நானியாக நினைத்து லவ் பண்ணுகிறார் சமந்தா. அதேபோல் சந்தானமும், சமந்தாவை துரத்தி, துரத்தி லவ் பண்ணுகிறார்.
சந்தானம் இதுவரை நடித்த படங்களிலேயே, இந்தபடத்தில் தான் அவருக்கு டயலாக் ரொம்ப கம்மி, அதேசமயம் அவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் அமையும் என்றார்.
0 comments:
Post a Comment