நான் அரசியலுக்கு வந்தே தீருவேன்; என்னை யாராலும் தடுக்க முடியாது, என்று வைகைப்புயல் வடிவேலு கூறியிருக்கிறார். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் நடிகர் வடிவேலு பங்கேற்பாரா, மாட்டாரா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்திலும், திரையுலக வட்டாரத்திலும் எழுந்துள்ளது.
இதற்கு பதில் அளித்துள்ள வடிவேலு, என் தாய் சரோஜினி உடல் நலக்குறைவு காரணமாக மதுரை ஐராவத நல்லூரில் மருத்துவமனையில் உள்ளார். அதனால் என்னால் சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடமுடியவில்லை, என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது பேட்டியில், வடிவேலுவுக்கு அரசியல் எல்லாம் தேவையா என்று சிலர் கேட்கிறார்கள்.
ஓட்டுப்போடும் அத்தனை பேரும் அரசியல்வாதிகள்தான். ஓட்டுப்போடும் மக்களில் நானும் ஒருவன் என்பதால் நானும் அரசியல்வாதிதான்.
தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று என்னை கேட்கிறார்கள். காலமும், சூழ்நிலையும் நிர்ப்பந்நதிக்கும்போது மக்களை சந்திப்பேன்.
நான் யாருக்கும் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளமாட்டேன். தீவிர அரசியலில் குதிப்பேன். அரசியலுக்கு நான் வரக்கூடாது என்று சொல்வது அபத்தம்.
நிச்சயமாக அரசியலுக்கு வந்தே தீருவேன். என்னை யாரும் தடுக்க முடியாது. திரையுலகம் என்னை ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டதாக சொல்கிறார்கள்.
விரைவில் நான் கதாநாயகனாக நடிக்கும் புதுப்பட அறிவிப்பு வெளிவரும் என்று கூறியிருக்கிறார், வடிவேலு.
0 comments:
Post a Comment