சினிமாவில் ரீ-எண்ட்ரியாகி இருக்கும் நடிகை நயன்தாரா, அஜித்தின் பில்லா-2 படத்தில் கெஸ்ட் ரோலில் வர இருக்கிறாராம்.
கடந்த 2007ம் ஆண்டு அஜித், நயன்தாரா, நமீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் பில்லா.
இப்படத்தில் அஜித்தின் அசத்தலான நடிப்பு, பின்னணி இசை, விஷ்ணுவர்தனின் விறுவிறுப்பான திரைக்கதை தவிர, படத்திற்கு நயன்தாரா-நமீதாவின் கவர்ச்சி காம்பினேஷனும் ப்ளஸ் பாயிண்டாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில் பில்லா படத்தின் இரண்டாம் பாகமாக பில்லா-2 உருவாகி வருகிறது.
சக்ரி டோல்ட்டி இயக்கும் இப்படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடித்து வருகிறார்.
படத்தின் பெரும்பாலான பகுதி முடிந்துவிட்ட நிலையில், பில்லா-2வில் கெஸ்ட் ரோலில் நடிகை நயன்தாராவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பிரபுதேவாவுடனான காதலை முறித்து கொண்டு சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் நயன்தாரா, தெலுங்கில் ஒரு படத்திலும், தமிழில் அஜித் ஜோடியாக ஒரு படத்திலும் கமிட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment