மீண்டும் மருதநாயகம் படப்பிடிப்பா?

நடிகர் கமலஹாசன் 1997-ல் மருதநாயகம் என்ற படத்தை தொடங்கினார். இங்கிலாந்து ராணி எலிசபெத் இதன் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. பின்னர் நிதி நெருக்கடி காரணமாக பட வேலைகள் நிறுத்தப்பட்டன. இப்படம் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த போர் வீரன் யூசுப்கானை பற்றிய கதை.


பிரமாண்ட சரித்திர அரங்குகள், போர் வீரர்கள் உடைகள் என இதற்கு ரூ. 150 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டதால் படத்தை கைவிட்டார்.

தற்போது மீண்டும் “மருத நாயகம்” படப்பிடிப்பை துவங்கப் போவதாகவும் இதில் ரஜினியும் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் கமல் மும்பையில் நேற்று பேட்டி அளித்ததாக செய்திகள் வெளியாயின.


இது தவறான செய்தி என்றும் கமல் அவ்வாறு பேட்டி அளிக்கவில்லை என்றும் மறுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கமல் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


“மருதநாயகம்” படப்பிடிப்பை துவங்கப் போவதாகவும் ரஜினியும் அதில் நடிப்பார் என்றும் கமல் மும்பையில் பேட்டியளித்ததாக வெளியான செய்தி உண்மையல்ல 15 வருடத்துக்கு முன் கமலும் ரஜினியும் நட்சத்திர கலை விழாவுக்காக சிங்கப்பூர் சென்ற போது கமல் அளித்த பேட்டியை எடுத்து இப்போது அவர் சொன்னதாக இணைய தளம் ஒன்று வெளியிட்டு உள்ளது.


கமல் தற்போது விஸ்வரூபம் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இப்படம் முடிந்ததும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் “தலைவன் இருக்கின்றான்” என்ற படத்தில் நடிக்க உள்ளார்.


இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...