ஏற்கனவே ஒஸ்தி படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்த சிம்பு, இப்போது நயன்தாரா மீண்டும் நடிக்க வந்ததையடுத்து, தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வைக்க இயக்குநர் ஒருவர் மூலம் முயற்சி செய்து வருகிறாராம்.
பிரபுதேவாவை காதலிப்பதற்கு முன்னர் சிம்புவை காதலித்தவர் நடிகை நயன்தாரா. சிம்புவுடனான காதலும் முறிந்து, இப்போது பிரபுதேவாவுடனான காதலும் முறிந்து தவித்து வரும் நயன்தாரா, மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
முதற்கட்டமாக தெலுங்கில் ஒருபடத்திலும் தமிழில் அஜித் ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் நயன்தாராவுக்கு தூது விட்டு இருக்கிறாராம் சிம்பு. அதாவது தன்னுடைய அடுத்த படத்தில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
இதற்காக இயக்குநர் ஒருவரும் நயன்தாராவிடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் ரீ-என்ட்ரி ஆகியிருக்கும் நயன்தாராவை, சிம்புவுடன் ஜோடி சேர்த்து படம் இயக்கினால், படம் ஹிட்டாவதோடு, நல்ல வசூலும் பெறும் என்பது அந்த இயக்குநரின் நம்பிக்கை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்...!
0 comments:
Post a Comment