இந்தி படமான ரேஸ்-2 படத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார் நடிகை தீபிகா படுகோனே. இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தீபிகா படுகோனே.
இவர் சவுந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடிக்க இருக்கும் கோச்சடையான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் ரஜினி படத்தில் நடிப்பதற்காக ரேஸ்-2 படத்தில் இருந்து தீபிகா விலகிவிட்டதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் தாரணி பாலிவுட் சினிமா கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தீபிகா மீது புகார் கொடுத்துள்ளார்.
அதில் நான் டிப்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரேஸ் 2 இந்திப் படத்தை தயாரித்து வருகிறேன். இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அவர் ஒரு வாரம் படப்படிப்பில் பங்கேற்று நடித்துக் கொடுத்தார். இப்போது திடீர் என்று ரேஸ் 2 படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக கூறுகிறார்.
இதனால் ரேஸ் 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற முடியாமல் தடைபட்டு எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார் தீபிகா படுகோனே. இதுகுறித்து அவர் கூறியதாவது, கோச்சடையான் படத்திற்காக ரேஸ்-2 படத்திலிருந்து விலகவில்லை.
ரொம்ப நாளைக்கு முன்பே இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது. ரேஸ்-2 படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்து விட்டு, படப்பிடிப்பு நடத்தாமல் ஒரு வருடத்திற்கு மேலாக இழுத்தடித்து கொண்டு உள்ளனர். இதனால் என்னுடைய கால்ஷீட் வேஸ்டானது.
எனவே அந்த படத்தில் இருந்து விலகினேன். இதுகுறித்து நடிகர் சங்கம் என்னிடம் விளக்கம் கேட்டுள்ளது. நான் பதிலளிக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment