அஜித்தை வைத்து விஷ்ணுவர்தன் இயக்க இருக்கும் புதிய படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவும், கூடவே இன்னொரு முக்கிய ரோலில் ஆர்யா நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜித் நடித்த பில்லா படம் மாபெரும் ஹிட்டானது. தொடர்ந்து அஜித்தை வைத்து பில்லா-2 படத்தையும் விஷ்ணுவர்தன் தான் இயக்குவதாக இருந்தது.
ஆனால் இடையில் தெலுங்கு பட பிஸியால், விஷ்ணுவர்தன் அந்த படத்தை இயக்க முடியாமல் போனது. இதனையடுத்து அந்த பொறுப்பை உன்னைப்போல் ஒருவன் சக்ரி டோல்டி ஏற்றார். தற்போது இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் பில்லா-2க்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார் என்றும், இதை ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்ட பொருட்ச் செலவில் தயாரிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. கூடவே படத்தில் இன்னொரு முக்கிய ரோலில் ஆர்யாவும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
காதலுக்காக சினிமாவைவிட்டு போன நயன்தாரா, காதல் கசந்ததால் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
விஷ்ணுவர்தன் சொன்ன கதை ரொம்பவே பிடித்து போனதால் இந்தபடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாவுகம், படத்தில் அம்மணிக்கு பேசப்பட்ட சம்பளம் ரூ.1.5கோடி என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தெலுங்கிலும் ஒரு படத்தில் நயன்தாரா நடிக்க சம்மதித்துள்ளார் என்பதும், அந்த படத்திற்கும் இதே சம்பளம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment