துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம், தீபாவளி போன்ற படங்களை இயக்கிய எழில், நீண்ட இடைவெளிக்கு பிறகு "மனம் கொத்தி பறவை" எனும் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் ஹீரோவாக விஜய் டி.வி., புகழ் மற்றும் சமீபத்தில் மெரினா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக புதுமுகம் ஆத்மியா என்பவர் நடிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் வளர்ந்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு முதலில் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க இருந்தார். பின்னர் அவர் நீக்கப்பட்டு இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதுகுறித்து எழில் கூறுகையில், ஆரம்பத்தில் யுவன் தான் இசையமைக்க இருந்தார்.
ஆனால் இப்படத்தின் பட்ஜெட்டிற்கு, யுவனின் இசையமைப்பு ஒத்துவராது என்பதால், அவருக்கு பதிலாக இமானை இசையமைக்க வைத்தோம்.
இமானும் ரொம்ப திறமையானவர் தான். யுவனிடம் நான் என்ன எதிர்பார்த்தேனோ, அதை இமான் நிச்சயம் செய்வார். அதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்றார்.
சிவகார்த்திகேயன் குறித்து கூறுகையில், நான் அஜித், விஜய், ஜெயம் ரவி உள்ளிட்ட ஹீரோக்களுடன் பணியாற்றி இருக்கிறேன்.
இவர்கள் எல்லோரும் இன்று டாப் ஸ்டாராக இருக்கிறார்கள். அதுபோல சிவகார்த்திகேயனுக்கும் டாப் ஸ்டாராக எல்லா தகுதியும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment