மங்காத்தா படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க போகிறார் வெங்கட்பிரபு. கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூலை குவித்த படங்களில் அஜித்தின் மங்காத்தா படமும் ஒன்று.
சென்னை-28, சரோஜா, கோவா படபுகழ் வெங்கட்பிரபு இயக்கிய இந்தபடத்தில், அஜித் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில், அதாவது வில்லனாக நடித்திருந்தார்.
இதனால் ரசிகர்களிடம் இந்தபடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அஜித்தே வெங்கட்பிரபுவிடம் நாம் இன்னொரு படம் பண்ணலாம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் வெங்கட்பிரபு, அஜித்தை சந்தித்துள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய வலைதளத்தில் வெங்கட்பிரபு கூறியிருப்பதாவது, ரொம்ப நாள் கழித்து நான், நம்ம தலையை சந்தித்தேன்.
மங்காத்தா படப்பிடிப்பு நாட்களில் நடந்த பல்வேறு சுவாரசியமான விஷயங்களை இருவரும் பேசி மகிழ்ந்தோம்.
மேலும் நாங்கள் இருவரும் சேர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இணைய முடிவெடுத்துள்ளோம்.
அது விரைவில் நடக்கும் என்று கூறியிருக்கிறார்.
0 comments:
Post a Comment