தமிழ் உணர்வு ரீதியான படங்களில் நடிப்பதற்கு ஒரு போதும் சம்பளம் வாங்கியதில்லை..... என பேட்டிகளில் எல்லாம் பில்ட் அப் கொடுக்கும் அந்த தகடுதகடு நடிகர்., "வெங்காயம்" படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஈ.வெ.ரா., கொள்கைகளை பறைசாற்றும் பகுத்தறிவுவாதி வேடத்தில் ஆடப்பாடியிருந்தார்!
இதற்கு சம்பளமே வாங்கவில்லை தகடுதகடு என ஒரு பக்கம் பப்ளிசிட்டியை கிளப்பிவிட்டு விட்டு., நடிகர் சப்தமில்லாமல் வாங்கிய சம்பளம்., இந்த ஒரே ஒரு பாடலில் தோன்றி நடிக்க நான்கு லட்சங்கள் என்கிறது விவரமறிந்த வட்டாரம்!
அதே மாதிரி, தான் ஹீரோவாக நடித்த படங்கள் வெளிவர எந்தவித உதவியும் செய்யாத ஒரே ஹீரோ தமிழ் சினிமாவில் தகடுதகடு ஹீரோவாகத்தான் இருக்க முடியும் என்கிறது அதே விவரமறிந்த வட்டாரங்கள்!
இவரது உதவி எந்தவிதத்திலும் இல்லாததால் தான் "வெங்காயம்", "உச்சிதனை முகர்ந்தால்" உள்ளிட்ட பகுத்தறிவு தமிழுணர்வு படங்கள் ரிலீஸ், ரீரிலீஸ் என்று பல்வேறு போராட்டங்களை சந்திப்பதாகவும் சொல்கிறார்கள். பாவம்!
இதுவே ஹீரோ உதவிக்கரம் நீட்டியிருந்தார் என்றால் ஒரே ரிலீஸில் மேற்படி படங்கள் செமகல்லா கட்டியிருக்கலாம் என்றும் தகவல்கள் கசிகின்றன!
பகுத்தறிவும், தமிழ் உணர்வும் சம்பள உணர்விற்கும் உணவுக்கும் அப்புறம் தான் போலும் தகடு தகடு நடிகருக்கு?
0 comments:
Post a Comment