நடிகை கத்ரீனா கைப், பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில், 10 நிமிடம் பங்கேற்க ரூ.1 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைப். இவர் தன்னுடைய படங்களுக்கே கோடி கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்.
இதுபோதாது என்று விளம்பரம், பொது விழாக்களில் பங்கேற்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் தனியாக ஒரு லம்ப் தொகையை பெறுகிறார்.
இந்நிலையில் கேரளாவில் வருகிற மார்ச் 25ம் தேதி ஒரு பேஷன் ஷோ நிகழ்சசி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கத்ரீனா பங்கேற்ற வேண்டும் என்று அவரிடம் கேட்டுள்ளனர்.
அவரும் வருகிறேன், ஆனால் ரூ.1 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
விழாக்குழுவினர் ஓ.கே., சொல்லிவிட்டனர். இத்தனைக்கும் கத்ரீனா அந்த விழா மேடையில் தோன்ற இருப்பது வெறும் 10 நிமிடம் தான். இதற்கு தான் இவ்வளவு பெரிய தொகை கத்ரீனாவுக்கு பேசப்பட்டு இருக்கிறது.
தென்னிந்திய நடிகைகளை பொறுத்தவரை இது போன்ற பொது விழாக்களில் பங்கேற்க குறைந்த சம்பளமே கேட்கின்றனர். அசின், ஸ்ரேயா, த்ரிஷா போன்றவர்கள் இதற்காக ரூ.30 லட்சம் வரை கேட்கிறார்களாம்.
1 comments:
முப்பது லட்சம் உங்களுக்கு குறைந்த தொகையாத் தோணுது? அப்ப பெரிய தொகைன்னா உங்க கணக்குல எவ்வளவுங்க?
Post a Comment