கோலிவுட் மட்டுமல்லாது இந்தியா முழுக்க சினிமா பற்றிய இப்போதைய ஹாட் டாக்கே ஆஸ்கர் ரவிச்சந்திரனை பற்றி தான். அதாகப்பட்டது ஆஸ்கர் ரவிச்சந்திரன் அடுத்து, கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார் என்பது அனைவரும் தெரிந்த செய்தி தான்.
இப்போது புதிய செய்தி என்னவென்றால் இந்தபடத்தில் கமலுடன் சேர்த்து ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கி ஜான், மற்றும் பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் ஆகியோரையும் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம் ரவிச்சந்திரன்.
சுமார் ரூ.300 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இப்படம் அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகள் நிறைந்த படமாக இருக்குமாம்.
மேலும் இந்தியாவில் இவ்வளவு பெரிய பொருட் செலவில் தயாராகும் முதல் படம் இது என்றும், விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜாக்கி ஜானை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்பது ரவிச்சந்திரன் கனவு, அதற்கு அச்சாரமாக தன்னுடைய தசாவதாரம் படத்தின் ஆடியோ ரிலீஸை ஜாக்கி ஜானை வைத்து பிரம்மாண்டமாக நடத்தினார் ரவி.. என்பது நினைவிருக்கலாம்.
0 comments:
Post a Comment