அரவான் படத்தை தொடர்ந்து வசந்தபாலன் அடுத்து இயக்க போகும் படத்தில் பருத்திவீரன் கார்த்தி நடிக்க போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
இதுநாள் வரை கமர்ஷியலாக நடித்து வந்த கார்த்திக்கு, இப்போது சிரீயஸ் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறதாம்.
ஆனால் தனக்கு ஏற்றபடி யார் கதை தருவார் என்று யோசித்த போது அவர் நினைவில் தோன்றியவர் வசந்தபாலன் தானாம்.
உடனே அவரை சந்தித்து உங்க கம்பினேஷனில் எனக்கு ஒரு படம் பண்ணுங்க என்றாராம்.
அதுவும் உங்க ஸ்டைலிலேயே இருக்கட்டும், எனக்காக எதையும் மாற்றாதீங்க என்று கோரிக்கையும் வைத்தாராம்.
இந்த பேச்சுவார்த்தையில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், அநேகமாக வசந்தபாலனின் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment