இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலிப்பதாக பாலிவுட்டிலும், இந்திய கிரிக்கெட் வட்டாரத்திலும் கிசுகிசுக்கப்படுகிறது. பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர்.
யாஷ் சோப்ராவின், ரப் நே பனாதி ஜோடி என்ற படம் மூலம் அறிமுகமான அவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து இப்போது முன்னணி நடிகையாக உயர்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவர், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான சுரேஷ் ரெய்னாவுடன் காதல் வலையில் சிக்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக இவருவரும் ஒன்றாக சுற்றி திரிவதாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்று பயணம் சென்ற போது, அனுஷ்கா தன்னுடைய சூட்டிங்கை ரத்து செய்துவிட்டு ரெய்னாவுடன் ஊர் சுற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
இதனிடையே அனுஷ்காவின் மேனேஜர் இந்த செய்தியை மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ரெய்னாவை, அனுஷ்காவுக்கு தெரியும், மற்றபடி அவர்களுக்குள் வேறு எந்த தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment