அஜித் நடிப்பில் உருவாகி வரும் பில்லா-2 படத்தில் ரொம்ப ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளில் அஜித் மிரட்டலாக நடித்து இருக்கிறாராம். மங்காத்தா படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் பில்லா-2.
டேவிட் எனும் தூத்துக்குடி இளைஞன் எப்படி பில்லாவாக மாறினான் என்பதே பில்லா-2 படத்தின் கதை.
படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்க, உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோல்டி இப்படத்தின் டைரக்ஷ்ன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. படத்தில் அஜித் நடிப்பை காட்டிலும், அவரது சண்டைக்காட்சிகள் தான் மிரட்டலாக வந்திருக்கிறதாம்.
ஹெலிகாப்டர் சண்டைக்காட்சி, ரயில் சண்டைக்காட்சி, ஏகப்பட்ட துப்பாக்கி சூடு சண்டைக்காட்சி என்று ரொம்ப ரிஸ்க் எடுத்து தன் உயிரை பணயம் வைத்து மிரட்டலாக நடித்திருக்கிறாராம்.
சுருக்கமாக சொல்லப்போனால் ஹாலிவுட் பட ரேஞ்ச்சுக்கு சண்டைக் காட்சிகள் வந்திருக்கிறதாம்.
0 comments:
Post a Comment