மே 1 உழைப்பாளர் தினத்தில் முக்கிய நடிகர்களின் படங்களின் ஸ்டில்கள் மற்றும் டிரைலர்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்து வரும் விஸ்வரூபம் படத்தின் ஸ்டில்கள் மற்றும் டிரைலர் வெளியாகி உள்ளன.
இதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் துப்பாக்கி படத்தின் ஸ்டில்களும் வெளியாகி உள்ளன.
இதில் விஜய்யின் துப்பாக்கி படத்தின் ஸ்டில்லை பார்க்கும் போது ஏற்கனவே அஜித் நடித்த அசல் படத்தின் ஸ்டில்கள் போன்று இருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதாவது அசல் படத்தில் சிவா கேரக்டரில் வரும் அஜித், கூலிங் க்ளாஸ் போட்டு கொண்டு வாயில் சுருட்டை ஊதிக்கொண்டு வருவது போல, இப்போது வெளியாகி இருக்கும் துப்பாக்கி படத்தில் விஜய்யும் கூலிங் க்ளாஸ், வாயில் சுருட்டு என சகலமும் அப்படியே இருக்கிறார்.
என்ன ஒரு சிறுவித்தியாசம் அசல் படத்தில் அஜித்திற்கு தாடியும்-கிருதாவும் சேர்ந்து இருக்கும், விஜய்க்கு அப்படி இல்லை.
மற்றபடி அஜித் ஸ்டைல்தான் விஜய் என்கிறார்கள்.
1 comments:
100% unmaithan
Post a Comment