ஏழாம் அறிவு படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜானி டிரை நெகுனுடன் மோதிய நடிகர் சூர்யா இப்போது, சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் மற்றொரு ஹாலிவுட் நடிகர் டேனி சபானியுடன் மோத உள்ளார்.
டைரக்டர் ஹரி இயக்கத்தில், சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் சிங்கம். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக சிங்கம்-2-வை இயக்கி வருகிறார் ஹரி.
இதிலும் சூர்யா-அனுஷ்காவுடன் இன்னொரு நாயகியாக ஹன்சிகா நடித்து வருகிறார். கூடவே படத்தில் ஒருபாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகர் அஞ்சலி.
பொதுவாக ஹரி தன்னுடைய படங்களின் ஷூட்டிங்கை அதிகளவு வெளிநாடுகளில் எடுக்கமாட்டார்.
ஆனால் சிங்கம்-2 படத்தின் ஷூட்டிங்கை தென் ஆப்ரிக்கா, தான்சானியா போன்ற நாடுகளில் படமாக்க இருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் வில்லனாக பிரபல ஹாலிவுட் நடிகர் டேனி சபானி நடிக்க உள்ளார்.
இவர் தி ஆக்ஸ்போர்ட் மர்டர், மெர்சினிரீஸ் போன்ற படங்களில் நடித்தவர். இவரும், சூர்யாவும் மோதும் சண்டைக்காட்சிகள் கென்யா, தான்சானியா போன்ற நாடுகளில் படமாக்க உள்ளனர்.
இதற்காக விரைவில் சூர்யா உள்ளிட்ட சிங்கம் படக்குழுவினர் விரைவில் தென் ஆப்ரிக்கா பயணம் செய்ய இருக்கின்றனர்.
0 comments:
Post a Comment