நடிகர்களில் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு இருக்கிற நக்கல் எந்த நடிகருக்கும் இருப்பதாக தெரியவில்லை.
லத்திகா என்றொரு படத்தில் மட்டுமே நடித்து விட்டு, இப்போது கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் முன்னணி காமெடியன் ஆகி விட்டார்.
அரை டஜன் படங்களில் கமிட்டாகியிருப்பவர், கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டு படாதிபதிகளை மூடுஅவுட் செய்கிறார்.
அதோடு, பவர்ஸ்டாரெல்லாம் ஒரு நடிகரா. அவருடன் நடித்து எனது இமேஜை கெடுத்துக்கொள்ள மாட்டேன் என்று எகத்தாளமாக பேசிய லட்சுமிராயை ஒன்பதுல குரு படத்தில் தன்னுடன் குத்தாட்டம் ஆட வைத்திருக்கிறார் பவர்.
இப்படி எதையும் சொல்லியடிக்கிற அளவுக்கு மாஸ் நடிகராகியிருக்கிறார்.
மேலும், ரஜினிதான் எனது மானசீக குருநாதர் என்றும் சொல்லிக்கொள்ளும் பவர்ஸ்டார், இப்போது ரஜினியின் கோச்சடையான் படம் ரிலீசாகிற அன்றே தனது ஆனந்த தொல்லை படத்தையும் வெளியிடப்போவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
அப்படியென்றால் ரஜினிதான் உங்களுக்கு போட்டி நடிகரா? என்று அவரைக்கேட்டால், எனக்கு யாரும் போட்டியில்லை. எனக்கே நானேதான் போட்டி என்றும் பல்டி அடிக்கிறார் பவர்.
0 comments:
Post a Comment