ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் தமிழுக்கு வந்தவர் கேரளத்து கிளி அசின். அதன்பிறகு விஜய், சூர்யா, விக்ரம் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையானார்.
அப்போது தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கஜினி படத்தின் தமிழ்ப்பதிப்பில் நடித்த அசின், அப்படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்தார்.
அப்படம் அங்கு மாபெரும் வெற்றி பெற்றதால், அதன்பிறகு கோலிவுட்டை மறந்து விட்டு பாலிவுட்டில் முழுகவனம் செலுத்தினார். இப்போது குறிப்பிடத்தக்க இந்தி நடிகைகளில் அசினும் ஒருவராகி விட்டார்.
இந்தநிலையில், தமிழில் இருந்து சென்ற வாய்ப்புகளை தவிர்த்து வந்த அசின், இப்போது காவலன் படத்தையடுத்து மீண்டும் விஜய் நடிக்கும் படமொன்றில் நடிப்பதற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்.
அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம். ஆனால் முன்பு ரஜினிக்காக அந்நிறுவனத்திடம் கதை சொல்லியிருந்த கே.வி.ஆனந்தை விஜய் நடிக்கும் படத்தை இயக்க வைக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
தலைவா படத்தை முடித்ததும் இப்படத்தின் வேலைகள் தொடங்குகிறதாம்.
0 comments:
Post a Comment