ரூ.200 கோடி வசூல் செய்த கமலின் விஸ்வரூபம்


முதல்முறையாக கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் ரூ.200 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்துள்ளது. கமலின் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவான படம் விஸ்வரூபம். 

பயங்கரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து இருந்தனர். 

இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அதனால் படத்தை தடை செய்ய தமிழக அரசு முன்வர, கமல் இந்த நாட்டை விட்டே வெளியே போவேன் என்று கூறும் அளவுக்கு பிரச்னை பெரிதாக, கடைசியில் பிரச்னையெல்லாம் ஓய்ந்து, பல தடைகளை கடந்து படமும் ரிலீஸ் ஆனது. 

தமிழகம், புதுவை தவிர்த்து பிறமாநிலங்களில் ஜன-25-ம் தேதியும், தமிழகத்தில் பிப்-7ம் தேதியும் படம் ரிலீஸ் ஆனது. படமும் அனைத்து தரப்பினரால் பாராட்டு பெற்றது. அதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. 

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளதாக அப்படத்தில் பூஜா குமார் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின், நியூஜெர்சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பூஜா குமார் இதனை தெரிவித்தார். ரூ.95 கோடியில் உருவான விஸ்வரூபம் படம் இப்போது ரூ.200 கோடி வசூல் செய்து இருப்பது கமல் உள்ளிட்ட படக்குழுவினரை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறது. 

அதே மகிழ்ச்சியோடு விஸ்வரூபம் பார்ட்-2 பணிகளை ரொம்ப துரிதமாக செய்து வருகிறார் கமல். இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் விஸ்வரூபம்-2-வும் வெளியாகிவிடும் என்று கூறப்படுகிறது. 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...