தடைகளை தாண்டி விஸ்வரூபம் இன்று தமிழ்நாடு முழுவதும் அமோக வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் சிறப்பு காட்சியை கமல் நேற்று சத்யம் சினிமாஸ் வளாகத்தில் உள்ள 6 டிகிரி தியேட்டரில் திரையிட்டுக் காட்டினார்.
இந்த தியேட்டரில்தான் ஆரோ 3டி ஆடியோ தொழில்பட்ப வசதி உள்ளது. இந்த சிறப்பு காட்சிக்கு ஜெயராம், சுஹாசினி, குஷ்பு, பிரபு, யுவன், கார்த்திக் ராஜா, பார்த்திபன், உள்பட பல திரையுலக பிரகமுகர்கள் வந்து படத்தை கண்டு களித்தார்கள்.
கமல் தியேட்டர் வாசலில் நின்று அனைவரையும் புன்னகையுடன் வரவேற்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் உள்ள மினி தியேட்டரில் விஸ்வரூபம் திரையிட்டுக் காட்டப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தார் செய்திருந்தனர். ரஜினி, தன் மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோருடன் பார்த்தார்.
படம் பார்த்து முடித்ததும் கமலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். "கமல் உங்க ஹார்ட் ஒர்க் பார்த்தேன் எக்ஸ்லெண்ட். டிபெனட்டா அதுக்கான பெனிபிட் உங்களுக்கு கிடைக்கும்.
உங்க பிரண்டுங்றதுல எனக்கு இன்னும் பெருமை ஜாஸ்தியாய் இருக்கு" என்று குறிப்பிட்டாராம்.
வருகிற 10ந் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் விஸ்வரூபத்தின் பிரீமியர் ஷோ இருக்கிறது. இதற்காக கமல் பூஜாகுமார், சேகர் கபூர் உள்ளிட்ட தனது விஸ்வரூபம் டீமுடன் 9ந் தேதி இரவு புறப்பட்டுச் செல்கிறார்.
0 comments:
Post a Comment