கோடை ஸ்பெஷலாக ரஜினியின் கோச்சடையான்


ரஜினி மறுவாழ்வு பெற்ற பின்பு நடித்துள்ள கோச்சடையான் படம் கோடை ஸ்பெஷலாக ஏப்ரல் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினி கமிட்டான படம் ராணா. ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தை இயக்க இருந்தார். 

படத்தின் படபூஜை எல்லாம் போடப்பட்டு ஷூட்டிங் ஆரம்பமாக இருந்த நிலையில் ரஜினிக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சென்று சிகிச்சை பெற்று கிட்டத்தட்ட மறுவாழ்வு பெற்று திரும்பினார் ரஜினி. 

உடல்நலம் சரியில்லாமல் போனதால் ராணா படம் கைவிடப்பட்ட நிலையில், தனது மகள் சவுந்தர்யா இயக்கும் 3டி படமான கோச்சடையானில் நடிக்க கமிட்டானார் ரஜினி. 

இப்படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோனேயே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஆதி, நாசர், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், நடிகை ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகிறது. 

இந்நிலையில் படத்த‌ின் ரிலீஸை கோடை ஸ்பெஷலாக ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கு முன்பாக படத்தின் ஆடியோ அடுத்தமாதம் மார்ச்சில் வெளியிடப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ரஜினி மறுவாழ்வு பெற்று, திரும்பவும் நடித்து கோச்சடையான் படம் வெளிவர இருப்பதால் ரசிகர்கள் இந்தபடத்தை ரொம்ப ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...