கெளதம் மேனனா? - லிங்குசாமியா? - குழப்பத்தில் சூர்யா


மாற்றான் தோல்வி சூர்யாவை சற்று வருத்தமடைய செய்துள்ளது. அதனால் அடுத்து ஒரு சரியான ஹாட்ரிக் கொடுத்தால்தான் பழைய இடத்துக்கு வர முடியும் என்கிற கட்டாயத்தில் நிற்கிறார் சூர்யா. 

அந்த இடத்தை ஹரியின் சிங்கம்-2 பிடித்துத்தரும் என்கிற நம்பிக்கை இருந்தாலும், சினிமாவில் எதுவும் நடக்கலாமே? என்பதால், அடுத்தபடியாக முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்றும் வேகம் காட்டி வருகிறார். 

ஆனால் அப்படி அவர் கதை கேட்க களமிறங்கியபோது, அதற்காகவே காத்துக்கொண்டிருந்தவர்களைப்போன்று, கெளதம்மேனன், லிங்குசாமி இருவருமே சூர்யா முன் நின்றார்களாம். இருவருமே சிங்கம்-2 முடிந்ததும் ஆக்சன் சொல்ல நாங்க ரெடி என்கிறார்களாம்.

இதன்காரணமாக, இரண்டுபேரில் யாருக்கு முதலில் கால்சீட் கொடுப்பது என்று குழம்பிப்போய் இருக்கிறார் சூர்யா. இதில் கெளதம்மேனன், ஏற்கனவே சூர்யா நடித்த காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற படங்களை இயக்கி, சூர்யாவின் மீது மற்ற இயக்குனர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திக்கொடுத்தவர். 

அதோடு, யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தை விஜய்க்காக உருவாக்கியவர், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், அதே கதையில் சில திருத்தங்களை செய்து இப்போது துப்பறியும் ஆனந்தன் என்று சூர்யாவுக்காக மாற்றி வைத்துக்கொண்டு காத்திருக்கிறார். 

அதேபோல் லிங்குசாமியும் ஏற்கனவே சூர்யாவிடம் கதை சொல்லி விட்டு, சமந்தாவையும் புக் பண்ணி வைத்து விட்டு காத்திருப்பவர்தான்.

இதனால், இரண்டு விரலில் ஒரு விரலை தொடு என்று சொன்னால், எந்த விரலை முதலில் தொடுவது என்பது புரியாமல் குழப்பத்தில் நிற்கிறார் சூர்யா. இந்த நிலையில், இவர்களில் கெளதம்மேனன், நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம் என்ற இரண்டு தோல்வி படங்களை கொடுத்தவர். 

அதனால் லிங்குசாமி படத்தில் முதலில நடிக்கலாம் என்று சூர்யாவைச் சுற்றியிருக்கும் கதை இலாகா கண் சிமிட்டுகிறதாம். ஆனால் சூர்யாவோ, காக்க காக்க படத்தில் முதன்முதலராக எனக்கு காக்கி சட்டை போட்டு அழகுப்பார்த்தவர் கெளதம், அவரை எப்படி கழட்டி விடுவது என்று யோசிக்கிறாராம். அதனால் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...