பவர்ஸ்டாரின் காமெடி இலாகா


இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடியன்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதுகூட சம்பள விசயத்தில் கவனமாகத்தான் செயல்பட்டார்கள். 

நடித்த படங்கள் வரிசையாக ஓடினாலும் சம்பளத்தை கண்மண் தெரியாமல் உயர்த்தாமல் பார்த்து கவனமாகத்தான் உயர்த்தினார்கள். 

ஆனால் தற்போது சந்தானத்தால் தண்ணீர் ஊற்றி வளர்த்து விடப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசனோ, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் வெற்றியால் கண்டபடி ஆட்டம் போட்டு வருகிறார். 

யார் பட விசயமாக தொடர்பு கொண்டாலும் என் சம்பளம் கோடியில் தான் ஆரம்பமாகிறது, தர முடியும் என்றால் அட்வான்ஸ் கொடுங்கள். பேரம்பேசி என் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று சொடக் போடுகிறாராம்.

பவரின் இந்த பேச்சைக்கேட்டு அவரிடம் கால்சீட் கேட்டு மொய்த்து வந்த பட்ஜெட் படாதிபதிகள் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட்டம் பிடித்து விட்டார்கள். 

ஆனால் மெகா பட்ஜெட்டில் படம் பண்ணுபவர்களோ, அவர் கேட்டத் தொகையை மறுபேச்சின்றி கொடுத்து புக் பண்ணி வருகிறார்கள். இதனால் பயங்கர உற்சாகத்தில் இருக்கிறார் பவர். 

அதோடு, தன்னை சந்தானம் சில படங்களில் இருந்து கழட்டி விட்டபோது கலங்கிப்போன பவர்ஸ்டார். அடுத்து தனக்கென ஒரு காமெடி டீமை உருவாக்கும் உள்வேலைகளிலும் தீவிரமடைந்திருக்கிறார். 

இதனால் வடிவேலு, சந்தானத்தின் காமெடி இலாகாகாவில் இடம்பெற்றிருநத சில காமெடி நடிகர்கள் இப்போது பவர் பக்கம் சாய்ந்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...