நடிகர் கமல்ஹாசனை வைத்து உலகதரத்தில் ஒருபடம் எடுக்க ஆசைப்படுவதாக டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் டைரக்டர் முருகதாஸ். இந்தியில் கஜினியை எடுத்து அங்கும் வெற்றிக்கொடி நாட்டினார்.
தற்போது துப்பாக்கியை இந்தியில் ரீ-மேக் செய்து வருகிறார். கூடவே தனது சொந்த தயாரிப்பில் அவ்வப்போது படங்களையும் தயாரித்து வருகிறார்.
முருகதாஸ் அளித்துள்ள பேட்டி ஒன்றில், பொதுவாக நான் பெரிய பட்ஜெட்டில் ஆக்ஷன் படங்கள்தான் இயக்குகிறேன் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
அதை மாற்றும் வகையில் சிறிய பட்ஜெட்டில் புதுமுகங்களை வைத்து ஒரு காதல் படம் எடுக்கும் எண்ணம் இருக்கிறது.
கமல் சாரை வைத்து உலக தரத்தில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. அந்த கனவு நிச்சயம் நிறைவேறும் என நம்புகிறேன், என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment