தொலைக்காட்சி நடிகை பிருந்தாதாஸ் இயக்குனராகி விட்டார். படத்தின் பெயர் "ஹாய் டா". பெருமான் படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியவர் பிருந்தா.
அந்த அனுபவத்தில் சினிமா தயாரிப்பு நுணுக்கங்களை தெரிந்து கொண்டு இயக்குனராகி விட்டார். "பெருமான் படத்தில் பணியாற்றியபோது அதன் இயக்குனர் ராஜேஷ் கண்ணாகிட்ட இந்த கதையை சொன்னேன். அவரே தயாரிக்கிறேன்னு சொன்னார் படமும் தயாராயிட்டிருக்கு.
இது ஒரு புது அட்டம்ப்ட். ஹீரோ ஹீரோயின்னு யாரும் கிடையாது. உதய், அஸ்வின், பிரதீஷ், ஜாக்குலின், பாவனா, இந்த 6 பேரும்தான் முக்கிய கேரக்டர். இவுங்களுக்குள்ள நடக்குற யதார்த்தமான விஷயங்கள்தான் கதை. அதை காமெடியா சொல்றேன்.
துன்பம் வரும்போது நண்பர்கள் எந்த அளவுக்கு நடந்துக்கணும் என்பதையும், எந்த பிரச்னையும் பேசித் தீர்க்காலாம் என்பதையும் ராவான மெசேஜா சொல்லாமா சுவாரஸ்யமா சொல்றேன். நடிகையா ஏத்துக்கிட்டவங்க. இயக்குனராவும் ஏத்துக்குவாங்கன்னு நம்புறேன்" என்கிறார் பிருந்தாதாஸ்.
0 comments:
Post a Comment