சினிமாவில் பிசியாக நடித்து வந்தபோது, தனது உடல்கட்டை உயரத்துக்கு ஏற்ப கச்சிதமாக பராமரித்து வந்தார் நமீதா.
அதனால் அரும்பு மீசை ரசிகர்கள் அவரது கட்டுமஸ்தான கவர்ச்சியைக்கண்டு கிறங்கிப்போய் கிடந்தார்கள்.
நமீதா ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்றால், அவரை அரைகுறை மற்றும் குட்டை பாவாடை டிரஸ்களில் கண்டு களிக்கலாம் என்பதற்காக ஒரு பெருங்கூட்டமே தியேட்டர்களுக்குள் புகுந்தது.
ஆனால் இப்படி பெருவாரியான ரசிகர்களை பெற்றபோதும், நமீதாவுக்கு சமீபகாலமாக மருந்துக்கும் படம் இல்லை.
தமிழ்நாட்டுக்கு வந்தால், தெலுங்கு, கன்னடத்தில் பிசி என்றும், கன்னடத்துக்கு சென்றால் தமிழில் ரொம்ப பிசி என்று மாத்தி மாத்தி சொல்லி வண்டியோட்டி வருகிறார்.
இப்படி சொல்லிக்கொண்டு வேலை வெட்டியே இல்லாமல் சதா வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் நமீதா, தற்போது இன்னும் பன்மடங்கு ஊதி பெருத்து விட்டார்.
இதனால் தற்போதைய சூழ்நிலையில் படவாய்ப்பே அவருக்கு கிடைத்தாலும், அவரது உடம்பை பார்த்து நடிகர்கள் நடிக்க தயங்குகிறார்கள்.
இந்த உடல் மாற்றத்தை முன்வைத்து, அவரை முழுநேர வில்லி வேடத்தில் நடித்து சினிமாவில் மறு பிரவேசம் செய்யுமாறு சில கோலிவுட் நண்பர்கள் நமீதாவுக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள்.
ஆக, கூடிய சீக்கிரத்திலேயே அடுத்த சொர்ணாக்காவாக நமீதா அவதாரம் எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
0 comments:
Post a Comment