பாட்டிலேயே பதில் சொன்ன வம்பு நடிகர்

ஒல்லிபிச்சான் நடிகருடன் ஒரு படத்தில் நடிக்க குஷ்புவின் ஜெராக்ஸ் நடிகையை கேட்டார்களாம். 

அவரும் ஓகே சொல்லிவிட்டு மறுநாள் தயாரிப்பாளருக்கு போன் போட்டு "சாரி டேட்ஸ் இல்லை. 

அடுத்த தடவை நடிக்கிறேன்"னு சொல்லிட்டாராம். ஆனா உண்மையான காரணம் அது இல்லையாம். விரல் வித்தை நடிகர் ஒல்லிப்பிச்சானுடன் நடிக்க போட்ட தடைதான் காரணமாம். 

இதை அறிந்து நடிகையின் தாய்குலம். நடிகருக்கு போன்போட்டு, "என் மகள் நடிக்கிறது பற்றி முடிவெடுக்க நீ யார்-?" என்கிற ரேன்ஜில் படபட ஆங்கிலத்தில் பொளந்து கட்டினாராம். 

பதில் ஏதும் பேசாத விரல்வித்தை நடிகர் கடைசியாக "போன்ல நான் பேசுறதுக்கு முன்னாடி ஒரு காலர் டியூன் கேட்டிருப்பியே அதான் என்னோட பதில்"னு சொல்லி  போனை வச்சிட்டாராம். 

வம்பு நடிகர் போனோட காலர் டியூன் "வாடி வாடி வாடி கியூட் பொண்டாட்டி, நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி". இது எப்டி இருக்கு.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...