சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடிக்கும் ‘மாற்றான்’ படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நேற்று இரவு நடந்தது.
விழாவில் இயக்குனர்கள் கவுதம்மேனன் விஜய், லிங்குசாமி, ஹரி ஆகியோர் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட நடிகர் சூர்யா, படத்தின் இயக்குனர் கே.வி. ஆனந்த், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் நடிகர், நடிகைகளின் நடன நிகழ்ச்சி நடந்தது. சூர்யா ‘அஞ்சல அஞ்சல’ என்ற பாடலை பாடகர் கார்த்திக்குடன் இணைந்து பாடி நடனம் ஆடினார்.
அப்போது நடிகர்கள் கார்த்தி, பிரசன்னா ஆகியோரும் மேடையில் ஏறி நடனம் ஆடி சிங்கப்பூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
மனைவி சினேகாவுடன் இவ்விழாவில் பிரசன்னா கலந்து கொண்டார். டான்ஸ் மாஸ்டர் பிருந்தா நடன அமைப்பில் நடிகைகள் அஞ்சலி, நீது சந்திரா, பூர்ணா ரஷிய நடிகை ஜுலியா ஆகியோரும் பல்வேறு பாடல்களுக்கு மேடையில் நடனம் ஆடினார்கள்.
சிங்கப்பூர் ரசிகர்கள் 10 ஆயிரம் பேர் திரண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர். நடிகர்கள் சிவகுமார், பிரபு , நடிகைகள் சோனியா அகர்வால், தாரா, தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ்.அகோரம், ஏ.ஜி.எஸ். ரங்கராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment