பாலிவுட்டில் நடிகர் விஜய்

பிரபு தேவா இயக்கிய, "ரவுடி ரத்தோர் என்ற இந்தி படத்தில், ஒரு நடன காட்சியில் விஜய் இடம் பிடித்தார் .பிரபு தேவா தற்போது, பாலிவுட்டில் "பிசியானதால், மும்பையிலேயே தங்கி யுள்ளார்.

சமீபத்தில் மும்பை சென்றிருந்த விஜய், பிரபு தேவாவின் வீட்டுக்கு திடீரென சென்று, அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

நீண்ட நாட்களுக்கு பின், நண்பர்கள் இருவரும், மனம் விட்டு பேசினர். "இந்த சந்திப்பின்போது, இருவரும் இணைந்து, அடுத்த படத்துக்கு அஸ்திவாரம் போட்டிருக்கலாம், என்கிறது, கோலிவுட் வட்டாரம்.

என்னதான் இருந்தாலும் நம்ம ஊர் நடிகர்களுக்கு பாலிவுட் விஜயம் ஒரு ஆசை தான்.

அதுவும் சமீபத்தில் விஜய் பாணியிலான, "தபாங் போன்ற படங்களுக்கு, பாலிவுட்டில் நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது.

இதை வைத்து பார்க்கும் போது விஜய் பாலிவுட் அறிமுகத்திற்கு தயாராகிக்கொண்டு இருக்கிறார் என்ற பேச்சு உள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...