இந்தியில் ரீமேக் ஆகவுள்ள நான் ஈ படத்தில் அபிஷேக் பச்சனை நடிக்க வைக்கும் முயற்சியில் டைரக்டர் ராஜ மவுலி இறங்கியிருக்கிறார்.
நான் ஈ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வசூலை வாரிக்குவித்து வரும் நிலையில், இப்படத்தை இந்தியில் 3டியில் ரீமேக் செய்ய டைரக்டர் ராஜமவுலி திட்டமிட்டுள்ளார்.
வலிமையான திரைக்கதை இருந்தால் எதையும் ரசனையாக சொல்ல முடியும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் ராஜ மவுலியின் இப்படம் தெலுங்கிலும் மெகா ஹிட்டாகியுள்ளது.
இப்படத்தின் இந்தி ரீமேக்கில் நாயகனை தேர்வு செய்வதற்காக, இப்படத்தை அபிஷேக் பச்சனிடம் போட்டுக் காட்ட உள்ளாராம் ராஜமவுலி.
அபிஷேக் பச்சனுக்கு படம் பிடித்துவிட்டால் அவரை நானி கேரக்டரில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக ராஜமவுலி கூறியுள்ளார்.
அதேசமயம் தமிழில் வில்லனாக நடித்த சுதீப்பும், ஹீரோயினாக நடித்த சமந்தாவும் இந்தியிலும் நடிப்பார்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.
0 comments:
Post a Comment