விக்ரம் நடித்துள்ள தாண்டவம் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாக இருக்கிறது. தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு டைரக்டர் விஜய், மீண்டும் விக்ரமை வைத்து தாண்டவம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் விக்ரமுடன் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவும் நடிக்கிறார். இவர்களுடன் அனுஷ்கா, எமி ஜாக்சன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
யு.டி.வி., இப்படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.
இந்நிலையில் படத்தின் ஆடியோவை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தவுள்ளனர் தாண்டவம் படக்குழுவினர்.
வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னை நந்தனத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த விழாவில் தாண்டவம் படக்குழுவினர் தவிர நிறைய திரை நட்சத்திரங்களும் பங்கேற்க இருக்கின்றனர்.
1 comments:
வணக்கம் ,
உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com
Post a Comment