கடந்த ஆட்சி காலத்தில் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் பல வெற்றி படங்களை கொடுத்த உதயநிதி, இப்போது ஹீரோவாக அவதரித்து இருக்கிறார்.
அவர் ஹீரோவாக அவதரித்த முதல்படமான ஒரு கல் ஒரு கண்ணாடி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
தொடர்ந்து தன்னை ஹீரோவாக நிலை நிறுத்தி கொள்ள ரேஸில் ஓடும் குதிரை போல் ஓடிக்கொண்டு இருக்கிறார்.
இப்போது அந்த ரேஸில் முந்த அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.
அதாவது, 1980களில் பாண்டியராஜன் நடித்து, இயக்கிய ஆண்பாவம் படத்தின் ரீ-மேக் உரிமையை இப்போது உதயநிதி வாங்கி இருக்கிறாராம்.
தமிழ்சினிமாவில் ஒருகாலத்தில் ஹிட்டடித்த படங்களை வரிசையாக பார்த்து வந்த உதயநிதி, ஆண்பாவம் படத்தில் மயங்கினாராம்.
உடனே அந்தபடத்தின் ரீ-மேக் உரிமையை கையோடு வாங்கிவிட்டாராம்.
மேலும் இப்படத்தில் பாண்டியராஜன் கேரக்டரில் தானும், பாண்டியன் கேரக்டரில் சந்தானத்தையும் நடிக்க வைக்க எண்ணியுள்ளாராம்.
0 comments:
Post a Comment