"தில்லு முல்லு" படத்தின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பங்கேற்ற நடிகர் கார்த்தி பேசுகையில், ரஜினி சார் நடித்த "தில்லு முல்லு" ரிலீஸ் ஆனபோது நான் ஆயா கையை பிடித்து கொண்டு ஸ்கூலுக்கு போய்கிட்டிருந்தேன்.
அதனால படத்தை அப்போ தியேட்டர்ல பார்க்க முடியாம போச்சு. அதன்பிறகு யு.எஸ்.-ல படிச்சுகிட்டிருந்தப்போ லோன்லியா பீல் பண்றப்போவெல்லாம் டெய்லி ஒரு மணி நேரமாவது இப்படத்தை டி.வி.டி.யில் பார்க்காமல் தூங் போகமாட்டேன்.
அந்த அளவிற்கு அதில் தேங்காய் சீனிவாசனும், ரஜினிசாரும் காமெடியில் பிச்சு உதறியிருப்பாங்க. அப்போ தியேட்டர்ல பார்க்க முடியாத வருத்தத்தை இந்த தில்லு முல்லு, சிவா நடிப்புல தீர்த்து வச்சிடுங்குறது என் நம்பிக்கை.
வாலி, எம்.எஸ்.வி., யுவன் கூட்டணியில் ஒரு புதிய காக்டெயில் மிக்ஸாக இருக்கும் இந்த "தில்லு முல்லுங்கறது என் எதிர்பார்ப்பு. அதற்காக இயக்குநர் பத்ரி, புது புரடியூசர் வேந்தர் மூவிஸ் எஸ்.மதன் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறேன்.
மற்றபடி என்னோட சின்ன வயது தில்லு முல்லு என்று பெரிசா சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை. ஏன்னா அவ்வளவு கட்டுப்பாடாக எங்களை வளர்த்துட்டாங்க...
எங்க போனாலும் சிவக்குமார் பையனுக்கு இங்கு என்ன வேலை? என்று கேள்வி வந்துடும். அந்த பயம் வேற, அதையும் மீறி நான் செய்த "தில்லு முல்லுன்னா நான் அடிக்கடி ஸ்கூலை கட் பண்ணிட்டு ஸ்கூலுக்கு பின்னாடி இருக்கிற பீச்சுல குளிச்சதுதான் என்று சுவாரஸ்யமாக பேசி சென்றார் நடிகர் கார்த்தி!
0 comments:
Post a Comment