ரஜினி - கமல் இணைந்து நடிக்காதது ஏன்?


16 வயதினிலே, மூன்று முடிச்சு, ஆடுபுலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும் உட்பட பல படங்களில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து  நடித்தனர். 

ஒரு காலகட்டத்துக்கு பிறகு, இருவரும் தனித்தனி ஹீரோக்களாக  உருவெடுத்தனர். 

அதன்பிறகு, அவர்கள் இருவரையும் இணைத்து  படமெடுக்க நடந்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. 

இதற்கான காரணத்தை, கமல் கூறும் போது,  "நானும், ரஜினியும் இணைந்து நடிக்கும் போது, எங்களது சம்பளம், இரண்டாக பிரிக்கப்பட்டது.

இருவருமே தனித்தனியாக நடிக்க தொடங்கியபோது, எங்களது சம்பளம் இரு மடங்கானது. 

அதோடு, இருவரும் அந்த சம்பளத்துக்கு தகுதி உடையவர்கள் என்பதை எங்களால் நிரூபிக்க முடிந்தது. 

அதன் பின் தான், தொடர்ந்து இருவரும், தனித்தே நடிப்பது என்ற ஒப்பந்தத்தை  எங்களுக்குள் எடுத்துக் கொண்டோம். 

அதை இப்போது வரை தொடர்ந்தும் வருகிறோம், என்றார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...