ஜெயம்ரவியை புலம்ப வைத்த அமீர்


இரண்டு ஆண்டுகளாக ஆதிபகவன் படப்பிடிப்பை நடத்தி வந்த அமீர், கடந்த மாதம்தான் தனது பிடியிலிருந்து ஜெயம்ரவியை விடுவித்தார். 

ஆனால் தற்போது புதிதாக ஒரு சிந்தனை தோன்ற, அடுத்து இன்னொரு பாடல் காட்சி எடுக்க வேண்டியுள்ளது. அதை ரோம் நகரத்தில் படமாக்கப்போகிறேன் என்று ஜெயம் ரவிக்கு தகவல் அனுப்பியுள்ளார். 

இதனால் அதுவரையில், அப்பாடா ஒருவழியாக பெரிய பிரச்னையில் இருந்து தப்பித்தோம் என்று அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில் அமீர் இன்னுமொரு பாடல் காட்சி படமாக்க வேண்டியிருக்கிறது என்று சொன்னதும் மயங்கி விழுந்து கிடக்கிறார் ஜெயம்ரவி.

அவர் இப்படியொரு நிலைக்கு ஆளாகியிருப்பார் என்பதை அறிந்த அமீர், ரோம் நகரில் உங்களை மட்டும் வைத்து பாடல் பண்ணப்போவதில்லை, நீதுசந்திராவையும் சேர்த்துதான் ரொமான்டிக்காக படமாக்கப்போகிறேன். 

அதுவும் வழக்கம்போல் இல்லாமல், இரண்டு காதலர்கள் தன்னை மறந்து பின்னி பிணையும் அசுரத்தனமான பாடல் காட்சி அது. 

கமர்சியல் படமல்லவா அதனால் அந்த பாடலை கலக்கலாக படமாக்கப்போகிறேன் என்று அவரிடம் ஆசை வார்த்தைகள் சொல்லி அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சித்து கொண்டிருக்கிறார். 

பாவம் ஜெயம ரவி, நானும் எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது என்று ரூம் கதவை அடைத்துக்கொண்டு புலம்பித்தள்ளிக்கொண்டிருக்கிறார்.

1 comments:

Sakthi Dasan said...

நண்பரே,

தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
http://www.tamilkalanchiyam.com

- தமிழ் களஞ்சியம்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...